தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்'

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020
Share
Advertisement
Tamil nadu, Election Commission, Supreme Court, Local Body Election, தமிழகம், உள்ளாட்சி, தேர்தல், ஆணையம், கமிஷன், உச்சநீதிமன்றம், நோட்டீஸ்

புதுடில்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலையும் பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல்களையும் நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news



இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X