பொது செய்தி

இந்தியா

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
politics, coronavirus, covid 19, india, பேச்சு, பேட்டி, அறிக்கை

'தமிழக போலீசாரை, சிங்கம், மூன்று முகம், காக்க காக்க போன்ற படங்களை பார்க்கக் கூடாது; அதனுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்' என, பாடம் நடத்தினாலே போதும்...' என, கூறத் தோன்றும் வகையில், மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி அளித்துள்ளார். இப்படி நிறைய...

'அந்த குற்றச்சாட்டால், உங்கள் கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயர் இன்னும் மறையவில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., ராஜா அறிக்கை:

என் மீது கூறப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழலை, நானே எதிர்கொண்டேன். அமைச்சர் உதயகுமாரின் தலைவர் ஜெயலலிதா போல ஓடி ஒளியவில்லை. சி.பி.ஐ.,யின் குறுக்கு விசாரணையை நானே எதிர்கொண்டு, வாதாடி வெற்றி பெற்றவன்.

'ரிசர்வ் வங்கி உத்தரவு, காற்றில் பறக்க விடப்படுகிறது; இது தான், புரியாத புதிராக இருக்கிறது...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:

கடன் தவணை, வட்டி வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளன. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், தனியார் வங்கியின் செயலால், விவசாயி ராஜாமணி என்பவர், தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வங்கி அதிகாரிகளே பொறுப்பு.

'இந்த கொரோனா காலத்துல, இப்படியா யோசிப்பீங்க... 'நல்ல வேளை... நம்மையும் கூட்டத்திற்கு அழைத்து, நமக்கு கொரோனா தொத்தியிருந்துச்சுன்னா ஆபத்து... நமக்கு நல்லது தான் செஞ்சிருக்காங்க'ன்னு யோசிக்கறதை விட்டுட்டு...' என, சொல்லத் துாண்டும் வகையில், கள்ளக்குறிச்சி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கவுதம சிகாமணி அறிக்கை:


latest tamil news
என் தொகுதியான கள்ளக்குறிச்சியில், புதிய மருத்துவக் கல்லுாரி துவக்க விழா நிகழ்ச்சியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொகுதி, எம்.பி.,யான எனக்கு அழைப்பு இல்லை.

'நாகரிக நாட்டில், இதற்கான சட்டம் இல்லை என்பதே அவமானமாக இருக்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை:

தொடர்ந்து பல ஆண்டு காலமாக, காவல் நிலையங்களில் சித்திரவதைகளும், மரணங்களும் தொடர்கின்றன. சித்ரவதை செய்வது சட்டவிரோதம். இதை தடுப்பதற்கு, நம் நாட்டில், எந்தச் சட்டமும் இல்லை.

'தமிழக போலீசாரை, சிங்கம், மூன்று முகம், காக்க காக்க போன்ற படங்களை பார்க்கக் கூடாது; அதனுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்' என, பாடம் நடத்தினாலே போதும்...' என, கூறத் தோன்றும் வகையில், மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி:

சாத்தான்குளம் சம்பவம் போல, மதுரையில் நடக்காமல் இருக்க, 'கஸ்டடி'யில் இருக்கும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென பயிற்சி அளிக்கப்படும்; மனநல ஆலோசனை முகாம் நடத்தப்படும்.

'ஊரடங்கு பிறப்பிக்கும் உத்தரவை, மத்திய - மாநில அரசுகள் தான் பிறப்பிக்க முடியும். அந்த அதிகாரத்தை, அரசியல் கட்சிகளிடம் கொடுத்தால் நன்றாக இருக்காது அல்லவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை:

நாடு முழுதும், கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, 100 நாட்களை தாண்டிவிட்டது. ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது தெரியவில்லை. தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி, மத்திய, பா.ஜ., அரசு செல்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-202020:46:23 IST Report Abuse
Rajagopal விசாரணை என்கிற படத்தை பாருங்கள். நம் ஊரில் போலீஸ் எப்படி செயல் படுகிறது என்று தெரியும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஜூலை-202018:18:40 IST Report Abuse
sankaseshan ரொம்பவும் துள்ள வேண்டாம் 2,g கேஸ் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-ஜூலை-202017:44:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni பரட்டைகொள்ளையனை கண்டு முகமூடிகொள்ளையன் கேலி செய்தானாம் என்று ஒரு சொல்வாடை உண்டே தெரியுமோ??????மக்கள் மக்காண்டிகளா இருக்கும்வரை இந்தகொள்ளையர்களுக்கே தான் சுக்கிரதசயாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X