கூடாரத்தை காலி செய்த சீனா; புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்| Chinese troops pull back from Galwan valley | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கூடாரத்தை காலி செய்த சீனா; புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (21)
Share
புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சீன துருப்புகள் நடைமுறை எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கினர். அவர்கள் கூடாரங்களை காலி செய்திருப்பதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறலில்
Chinese Troops, Galwan Valley, சீனா, ராணுவம், துருப்புகள், பின்வாங்கள், கல்வான் பள்ளத்தாக்கு, செயற்கைக்கோள், புகைப்படம்

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சீன துருப்புகள் நடைமுறை எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கினர். அவர்கள் கூடாரங்களை காலி செய்திருப்பதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். கடந்த மாதம், 15ல், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் ஞாயிறன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் எல்லையிலிருந்து ராணுவ வீரர்களை விலக்கி வருகிறது சீனா.


latest tamil news


தற்போது, சீன மற்றும் இந்திய துருப்புக்கள் லடாக்கின் மூன்று இடங்களான கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவிலிருந்து 2 கி.மீ தூரம் வரை வெளியேறி உள்ளனர். சீனர்கள் தற்போது நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் முடிவில் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் இதனை உறுதி செய்கின்றன. முன்னதாக ஜூன் 28 அன்று எடுக்கப்பட்ட படத்தில், நடைமுறை எல்லைக் கட்டுப்பாடு கோடின் இருபுறமும் சீனா தடுப்பு நிலைகளை அமைத்திருப்பது, கூடாரங்கள் கட்டியிருப்பது தெரிகிறது. இந்திய எல்லையில் 423 மீட்டர் ஊடுருவல் என படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த இடம் ரோந்து பகுதி 14-க்கு அருகில் உள்ளது. அங்கு தான் இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரும்பு தடிகள், கற்களை கொண்டு சண்டையிட்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 45 பேர் கொல்லப்பட்டனர். அதே இடத்தின் புகைப்படம் திங்களன்று எடுக்கப்பட்டது. அதில் கட்டமைப்புகள் அகற்றப்பட்டு, அந்த பகுதி தெளிவாக இருப்பதை காட்டுகிறது. ஜூலை மத்தியில் சீனா அனைத்து பகுதியிலிருந்தும் பின் வாங்கும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது மற்றொரு உயர்மட்ட கூட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X