சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம்: மேலும் 6 போலீசார் கைது?

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
திருநெல்வேலி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் 60, மகன் பெனிக்ஸ் 31 ஆகியோர் போலீஸ் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் இறந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளைஉத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைகொலை
Sathankulam Custodial Torture Case, Sathankulam case, 
சாத்தான்குளம், தந்தை, மகன், போலீஸ், கைது

திருநெல்வேலி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் 60, மகன் பெனிக்ஸ் 31 ஆகியோர் போலீஸ் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் இறந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளைஉத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைகொலை வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



வழக்கு தொடர்பாக, போலீசார் ரேவதி, பியூலா செல்வகுமாரி, பிரான்சிஸ், சிறப்பு எஸ்.ஐ.,பால்துரை ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சிலர், ஜெயராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு மேலும் சில போலீசாரிடம் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து அதில் 6 பேரை கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சி.பி.ஐ., வழக்குப்பதிவு:

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் சாத்தான்குளம் வந்து விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூலை-202017:28:38 IST Report Abuse
ஆப்பு ஆயிரம் போலீசார் கைதாகலாம். ஆனா ஒருத்தர் கூட தண்டிக்கப் படமாட்டார்கள். செத்த ரெண்டுபேரும் கொரோனா பாதித்து தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கன்னு கேசை முடிச்சிடலாம்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
08-ஜூலை-202017:13:26 IST Report Abuse
M.COM.N.K.K. நிரபராதிகள்( குற்றமற்றவர்கள் ) ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது அதுவே எங்கள் விருப்பம். குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
08-ஜூலை-202016:12:31 IST Report Abuse
Chandramoulli ஆகா அருமை உண்மை குற்றவாளி பெயர் விரைவில் வெளிவரும். இதை தூண்டியவர் பெயர்களும் வரும். இதை தானே எதிர்பார்த்தேன். தமிழக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். மூன்று நாட்களாக சத்தத்தையே காணவில்லை ஒருவரிடம் இருந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X