லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப்போகின்றன: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
Rahul, Economy, Tragedy, Destroy Millions, rahul gandhi, congress, indian economy, economic management, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ராகுல், பொருளாதாரம், சோகம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போவதாக காங்., எம்பி, ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரசை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளதாக காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். அந்தவகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலை நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.


latest tamil news


அந்த ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், குடும்பத்தினர் வருவாய் இழப்பால் மோசமாக பாதிக்கப்படுவார்கள், நடுத்தர குடும்பத்தில் கீழ் நிலையில் வசிப்போர் அதிகமான வேலையிழப்பைச் சந்திப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த அறிக்கையை குறிப்பிட்டு ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன. இது இனி அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
12-ஜூலை-202009:07:08 IST Report Abuse
sundarsvpr போரில் வீரனுக்கு ஒரு தடவைதான் மரணம். ஆனால் இருண்டவனுக்கு தினமும் தினமும் மரண பயம். இதன் வெளிப்பாடுதான் தைரியம்போல் நாள்தோறும் அறிக்கைகள்.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
09-ஜூலை-202020:52:58 IST Report Abuse
Murugan என்ன அரசியல் வாதி இந்த ராகுல் .உலகமே கொரோனாவினால் பொருளாதார சிக்கலில் தவிக்கும்போது இந்தியா என்ன செய்யும். ஊரடங்கு போடவில்லையென்றால் இந்நேரம் இந்தியாவில் கொத்துக்கொத்தாக உயிர்கள் இறைவனடி சென்று இருக்கும் .ஏதாவது பேச வேண்டுமென உளறி கொண்டியிருக்கும் இவருக்கு மக்கள் தான் பதில், சொல்லவேண்டும்.....
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
09-ஜூலை-202019:02:12 IST Report Abuse
Tamilnesan இவன் மூஞ்சியே சரியில்லை....எவனோ இவனுக்கு சூனியம் வைத்திருக்கிறான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X