பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
FriendsOfPolice, FOP, TNGovt, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், தமிழக அரசு, தடை, உத்தரவு, அரசாணை, வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

காவல்துறையில், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், போலீசாருக்கு உதவிட, 1993ல், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' என்ற, 'காவல்துறை நண்பர்கள் குழு' ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில், வாலிபர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர். இவர்கள், போலீசாருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது, போக்குவரத்தை சீர் செய்வது, குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கவும், பிடிக்கவும் உதவுவது என, பல்வேறு வகையில் உதவிகரமாக செயல்பட்டு வந்தனர். அதேநேரம், போலீசார், இவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரிகள், ஜெயராஜ், அவரது மகன், பெனிக்ஸ், ஆகியோர், ஜூன், 19ல், நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்தனர். போலீசார் கொடூரமாகத் தாக்கியதால், இருவரும் இறந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினருக்கும், தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை நிரந்தரமாக கலைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

தமிழகம் முழுதும், போலீசாருக்கு உதவியாக செயல்பட்டு வந்த, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், 'தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை பயன்படுத்தக் கூடாது' என, ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூலை-202011:09:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni நண்பனோ எதிரியே மொத்தத்துல ஓசி லே காசுபணம் போன்சாராயம் என்று எல்லாமே கிட்டனும் இதுக்களுக்கு மாப்பிள்ளைக்கு எதனால் மடங்கிருக்குன்னு கேட்டால் அவிக போலீசு லே வேலைங்க என்று ஒரு ஜோக் படிச்ச நியாபகம்
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
08-ஜூலை-202022:06:39 IST Report Abuse
Varun Ramesh பணியாட்களுக்குப்பற்றாக்குறை என்றால் பணியாட்களை முறையாக தேர்வு செய்து பணியிலமர்த்த வேண்டியதுதானே. அதுதானே உலக வழக்கம். அதை விடுத்து, ஊதியம் இல்லாமல் பணியாணை இல்லாமல் இவர்களை காவல் நிலையத்திற்குள் நடமாட விட்டதை எந்த சட்டத்தின் எந்தப்பிரிவு அனுமதிக்கிறது? எந்த ஒரு தொழிலாளர் சட்ட அங்கீகாரத்தரிக்குள்ளும் வராத பணியமர்த்துதல் சட்டவிரோதம் இல்லையா? ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக இதனை நீதிமன்றங்கள் எப்படி அனுமதித்தன. தாமாக முன்வந்து இதனை தடுத்திருக்க வேண்டாமா? சம்பளமில்லாத பணியாணை இல்லாத இந்த வேலைக்கு வருகிறவர்களுக்கு இதில் அப்படி என்ன ஆர்வம் அல்லது ஈர்ப்பு? இது ஊழலுக்கும் சட்ட விரோத செயல்களுக்குமான வழிமுறை என்பது நம் சட்டத்தின் கண்களுக்குப்புலப்பட ஜெயராஜும் பென்னிக்ஸும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டி வந்தது துரதிர்ஷ்டம். நீதி வழங்கும்போது நீதி தேவன் கண்களை கட்டிக்கொள்ள வேண்டுமென்பது புரிகிறது. அக்கிரமம் நடக்க பெரிய வாய்ப்புள்ளது என்கிற போதும் நீதி தேவன் கண்களை கட்டிக்கொள்வது சற்றும் அழகல்ல
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
08-ஜூலை-202021:09:03 IST Report Abuse
அறவோன் போலீசுக்கு நண்பர்கள் களவாணிகள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X