சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா கொல்லி மைசூர்பாக் விற்பனை; கோவையில் ஸ்வீட் கடைக்கு 'சீல்'

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோவை, மைசூர்பாக், கொரோனா, மூலிகை, பறிமுதல், சீல்

கோவை: ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் என்று கூறி, மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்த கடைக்கு, கோவை உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

கொரோனாவால் தொழில் நொடிந்து விட்டதே என்று வருத்தப்படுவோர் பலர் இருந்தாலும், அதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைப்போரும் ஊரில் இருக்கத்தான் செய்கின்றனர். கோவை, தொட்டிபாளையம் பகுதியில் செயல்படும் இனிப்பு கடை உரிமையாளர் ஸ்ரீராம், என்பவர், கொரோனாவை ஒரே நாளில் விரட்டும் மூலிகை மைசூர்பாக் என்று கூறி, மைசூர்பாக் தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.


latest tamil news


கிலோ 800 ரூபாய்க்கு மைசூர்பாக் விற்ற போதிலும், கொரோனா குணமாகி விடும் என்று நம்பி பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பித்தனர். உலக சுகாதார நிறுவனமே, கொரோனாவுக்கு இதுவரை மருந்தில்லை என்று கூறி வரும் நிலையில், ஒரே நாளில் கொரோனாவை மைசூர்பாக் விரட்டி விடும் என்று அவர் கூற ஆரம்பித்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காலை, அவரது கடையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.


latest tamil news


பேக்கரி மற்றும் ஸ்வீட் கடையான அங்கு, விற்பனைக்கு இருந்த 120 கிலோ மைசூர்பாக் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1 லட்சம் ரூபாய். கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், விற்பனை உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

டாக்டர் தமிழ்செல்வன் கூறுகையில், ''மூலிகை மைசூர்பாக் தயார் செய்ய எந்த அனுமதியும் பெறவில்லை. பொய்யான விளம்பரம் செய்து, மைசூர்பாக் விற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்பாக், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூலை-202010:49:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்மநாட்டிலே டயாப்டிஸ் பாதிச்சவா 89% என்று சொல்லுறாங்களே எவ்ளோ பெருங்க இந்தமாதிரி மைசூர்பா துண்ணே வியாதிக்கு அடைமயான கேஸுங்க லா இருப்பாங்க கொரோனாவேறு சுகர் பேஷண்ட்களையே நெறைய தாக்குதாமில்லே பஞ்சம் பிளக்க வழியாய்ல்லே அதென்னங்க எல்லா பிராடுகளிலேயும் முதல் ரேங்க் கோவைமாநகரமே இருக்கு அன்றுமுதல் இன்றுவரை கள்ள நோட்டுலேந்து மைசூர்பா வரை படுபாவிகளா நாசமாபோவீங்க
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-202005:30:41 IST Report Abuse
J.V. Iyer நீங்கள் போட்ட படத்திற்கும், இவர்கள் விற்கும் பண்டத்திற்கும் நிறைய வித்யாசம் உள்ளதே? அதுசரி இந்த மைசூர் பாக்குடன் வரும் சர்க்கரையை பற்றி, சர்க்கரை நோயை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? வம்பை (சர்க்கரை நோயை) விலை குடுத்து வாங்க மக்கள் தயாரா?
Rate this:
Cancel
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
08-ஜூலை-202022:29:00 IST Report Abuse
Edwin தங்களது கருத்துக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X