அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, pm modi, education, neet, exam, obc, creamy layer, தி.மு.க, ஸ்டாலின், பிரதமர் மோடி, மருத்துவ படிப்பு, கடிதம்,

சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்த தேர்வு முறையை கடைபிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதும் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்கான தேவை பெருமளவில் குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு அகில இந்திய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்ய முடியும்.


latest tamil news


அதற்கு பதிலாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டவை போக, மீதமுள்ள இட ஒதுக்கீடு கோட்டா அல்லாத குறிப்பிட்ட சதவீத இடங்களில் பிற மாநில மாணவர்கள் போட்டியிட முடியும். இந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கென குறிப்பிட்ட சதவீத இடங்களை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டியது தேவை இருக்காது. மருத்துவ படிப்புக்கான இளநிலை, முதுகலை மற்றும் பட்டய படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஜூலை-202015:42:34 IST Report Abuse
madhavan rajan எங்கு சென்றாலும் கடைசியில் நீட் தேர்வு ரத்து என்பதில் வந்து நிற்கிறார். அது கொண்டுவந்ததே இவர்களுடைய மத்திய கூட்டாட்சியில் தான் என்பது எதனால் இவருக்கு அறிவில் உரைப்பதில்லை. அதுமட்டுமின்றி அது நடத்தப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஆணை வேறு இருக்கிறது. இவருடைய மேதாவி வக்கீல் பாரதி, கபில் சிபல், பசி, சிங்கவி போன்றவர்களை வைத்து உச்சநீதிமன்றத்த்தின் தீர்ப்பை மாற்ற முயலவேண்டியதுதானே. எதற்கு இவர்களும் காங்கிரசும் சேர்ந்து கொண்டுவந்த தேர்வை பாஜக அரசு நீக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூலை-202011:58:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni நன்னபடிக்குறைவா மட்டுமேதான் முயற்சி செய்யவேண்டும் பென்சிலின்க்க்ஸ்பெல்லிங்க்கூட தெரியாத குருமுட்டைகள் எல்லாம் சிபார்சுலே மேடிக்கால்படிச்சுட்டு செய்றா பிராடுகள் எவ்ளோ தெரியுமா காசுக்குத்தான் டாக்டராவுறானுக சாமி சின்சியராக மக்களுக்கு சேவா செய்றாவா எவ்ளோபெருய்யா இருக்கானுக
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
09-ஜூலை-202010:32:58 IST Report Abuse
S.P. Barucha நாட்டுக்கு கேடு என்பதின் மாரு உருவம் தான் "கோட்டா". கோட்டாவிற்கு போராடுபவர்கள் அவர்களிடம் மருத்துவம் எடுத்தால் தான் யோக்கிதையம்சம் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X