விசாகப்பட்டினம் வாயுக் கசிவு; தென் கொரிய சி.இ.ஓ., உட்பட 12 பேர் கைது

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Gas Leak, LG Polymers, South Korean CEO, India, Arrests, Visakhapatnam, plastic plant, factory, வாயு கசிவு, தென்கொரியா, சிஇஓ, எல்ஜி_பாலிமர்

விசாகப்பட்டினம்: எல்.ஜி பாலிமர் தொழிற்சாலையில் மே மாதம் வாயு கசிவு ஏற்பட்டு பலர் இறந்த வழக்கில் ஆலையின் தென் கொரிய சி.இ.ஓ மற்றும் 11 நபர்களை இன்று (ஜூலை 08) போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி குழும நிறுவனத்தின், எல்.ஜி பாலிமர் என்ற பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வந்தது. ஒரு மாத ஊரடங்கினால் பராமரிக்கப்படாமல் மூடப்பட்டிருந்த ஆலையில் ரசாயனங்கள் வினைப்புரிந்து நச்சு வாயு காற்றில் பரவியது. மே 7, அதிகாலை நேரத்தில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்து மனிதர்கள் மயங்கி விழுந்தனர்.


latest tamil news


கவனக்குறைவால் ஏற்பட்ட இவ்விபத்தினால் 12 பேர் உயிரிழந்தனர். எண்ணற்ற ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளி இறந்தன. இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு, ஆலையை மனித வாழ்விடத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என இந்த வாரம் பரிந்துரைத்தது. ஆலை நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், எச்சரிக்கை அமைப்புகள் செயல்படவில்லை என்றும் அது கூறியது. மேலும் ஆலையின் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.


latest tamil news


கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு இச்சம்பவம் தொடர்பாக விசாகப்பட்டினம் போலீசார் எல்.ஜி.பாலிமர் நிறுவனத்தின் தென்கொரிய சி.இ.ஓ., இரண்டு இயக்குனர்கள் மற்றும் 8 ஊழியர்களை கைது செய்துள்ளனர். அரசு அதிகாரிகள் 3 பேர் அலட்சியமாக நடந்து கொண்ட காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202020:53:04 IST Report Abuse
babu எத்தனை பிரிவுகள்ல வழக்கோ அந்த அளவு வருமானம். அரசுக்கோ பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்ல. அரச சக்கரங்களுக்கு அதாவது தேஸ்பக்தாஸ்களுக்கு. செத்தவன் பூரா தேசவிரோதி(பாருங்க மாஸ்க் போடலை அப்படிம்பாங்க)
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
08-ஜூலை-202018:53:12 IST Report Abuse
Nathan பாஸ்கருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அபப தப்பவிட்டது யாரு, இப்ப புடிச்சு போட்டது யாருன்னு, உலகத்துக்கே தெரியும் அடப்போங்கப்பா
Rate this:
Cancel
David -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202017:41:23 IST Report Abuse
David அரசு அதிகாரிகளை மட்டும் கைது செய்யாமல் பணி இடைநீக்கம் செய்ய காரணம்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X