சுய தனிமைப்படுத்தலில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020
Share
Advertisement
Jharkhand CM, Self Isolates, Hemant Soren, Minister, Covid Positive, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, ஜார்க்கண்ட், சுயதனிமைப்படுத்தல், அமைச்சர், கொரோனா, பாதிப்பு

ராஞ்சி: ஜார்கண்டில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டார்.

ஜார்க்கண்டில் காங்., ஆதரவுடன் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மிதிலேஷ் தாகூருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் மிதிலேஷ் தாகூருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்தது. அமைச்சருடன் ஹேமந்த் சோரன் தொடர்பில் இருந்ததால், வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் மற்றும் எம்.எல்.ஏ மதுரா மகாடோ ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு முன்னெச்சரிக்கையாக, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருப்பேன். முக்கிய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன்.


latest tamil news


மேலும் மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். முகக்கவசம் இல்லையென்றால் முகத்தை துணியால் மூடி கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் போலவே, ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றவும், ஆனால் இதயங்களோடு இணைந்திருக்குமாறு நினைவூட்ட விரும்புகிறேன்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களும் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு ஹேமந்த் கேட்டுகொண்டுள்ளார். முதல்வர் சோரனின் தனிமைப்படுத்தலில் இருப்பதால் அவரது வீட்டிற்குள் நுழைய தடைசெய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X