கொரோனா காற்றில் பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (15)
Advertisement
ஜெனிவா: கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறிய நிலையில், அதனை ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும். ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும்
WHO, CoronaVirus SPREAD, Coronavirus, Corona, Covid-19, Transmission,  Through Air, Acknowledges, AIR, Evidence, கொரோனா, வைரஸ், காற்றில், பரவும், உலக சுகாதார அமைப்பு, உலக சுகாதார நிறுவனம், ஆதாரங்கள்

ஜெனிவா: கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறிய நிலையில், அதனை ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும். ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஒருவர் தும்மியப்பின், இருமியப்பின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என அறிவிக்க வேண்டும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரினர். இதனை ஆய்வு செய்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.


latest tamil news


ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


கொரோனா தடுப்பு மற்றும் நோய்த்தொற்றுப் பிரிவின் தலைமை அதிகாரி பென்னிடெட்டா அலிகிரான்ஸ் கூறியதாவது: கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அது உறுதியானது அல்ல. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள். மூடப்பட்ட இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பது, காற்று வசதி இல்லாத இடம் போன்றவற்றில் கொரோனா வைரஸ் காற்றில் பரவும். அதேநேரத்ததில் ஆய்வாளர்கள் அளித்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரும் கொலராடா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான ஜோஸ் ஜெமினிஸ் கூறுகையில், ‛நாங்கள் அளித்த ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஏற்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் அளித்த அறிக்கை உலக சுகாதார அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் என நினைக்கவேண்டாம். இது அறிவியல் ரீதியான விவாதம், மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக வேண்டும். அவர்களுடன் பலமுறை கூறியபோது, ஆதாரம் கேட்டதால், அதற்கான ஆதாரங்களை இப்போது அளித்துள்ளோம்,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
09-ஜூலை-202009:55:14 IST Report Abuse
R Ravikumar அமெரிக்கா தனது நிதியை நிறுத்தியது நியாயம் தான் . இதனை உடனே அவர்கள் அறிவிக்க வில்லை சீனாவிற்கு ஆதரவாகவே இவர்கள் செயல்படுவது போலத்தான் தெரிகிறது .இந்த சீனாவையும் , இந்த நிறுவனத்தையும் உலகம் மன்னிக்காது .
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூலை-202000:43:10 IST Report Abuse
unmaitamil உலகமே ஆராந்து உறுதிப்படுத்தியும் இந்த WHO, உள்ள ஊழல் பேர்வழிகள் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ??? சீனனை காப்பாற்ற இந்த "சைனா வைரஸ்" ஒரு தொற்று அல்ல என்றனர். பிறகு மனிதனுக்கு பரவாது என்றனர். அதற்குள் உலகில் மனிதர்கள் பலருக்கு பரவிவிட்டது. பிறகு இது பெரிய ட்ராப்லெட்ஸ், அதனால் மூன்றடி விலகி இருந்தால் போதும் என்றனர். பிறகு ஆறடி விலகி இருக்கவேண்டும் என்றனர். இந்த WHO, தான் உலகமே நம்பி பின்பற்றியது. ஆனால் இதுவும் ஒரு டுபாகூர் கிளி ஜோசியன்போல் உள்ளது. இப்போதுதான் தெரிகிறது இது நம்பத்தகுந்த அமைப்பு அல்ல என்று. பல நாட்டு மக்களின் உயிருடன் விளையாடிய இந்த அமைப்பு ஒழிக்கப்படவேண்டிய அமைப்புதான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-ஜூலை-202000:33:10 IST Report Abuse
Vena Suna WHO அர்த்தம் WASTE HUMBUG ORGANISATION என்று மாற்ற வேண்டும்...இவர்கள் தான் மற்றவர்களுக்கு முன்னதாக அது காற்றில் பரவுகின்றதா என்று சொல்ல வேண்டும்..ஆனால் மற்றவர்கள் பல முறை சொல்லியும்.. மறுத்திருக்கிறார்கள்.. இப்போது ஏற்கிறோம் என்கிறார்கள்...மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய இவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்...வானிலை அறிவிப்பு மாதிரி..இந்த நாட்டிலே இந்த மாதத்தில் இவ்வளவு பேருக்கு இந்த கொரோனா வரும் என்று அறிக்கை விடுகிறார்கள்...Trump சொல்வது சரியே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X