வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 08) அதிகபட்சமாக சென்னையில் 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,261 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 72,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 379 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 133 பேருக்கும், கன்னியாகுமரியில் 115 பேருக்கும், விழுப்புரத்தில் 106 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 26 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், ராணிப்பேட்டையில் 5 பேரும், தேனியில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கையில் தலா 2 பேரும், கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சியில் தலா ஒருவரும் என 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்

