கொரோனாவுக்கு 'மூலிகை' மைசூர்பா: விளம்பரம் செய்த இனிப்புக் கடை உரிமம் ரத்து

Added : ஜூலை 08, 2020 | |
Advertisement
கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக கொரோனா குணமடைவதாக விளம்பரம் செய்த இனிப்புக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. கோவை, தொட்டிப்பாளையத்தில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான இனிப்புக் கடை உள்ளது. இந்த கடையில் தயாரிக்கப்படும் 'மூலிகை' மைசூர்பாவை உண்டால், ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகி வருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் சின்னியம்பாளையம்,

கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக கொரோனா குணமடைவதாக விளம்பரம் செய்த இனிப்புக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.



latest tamil news




கோவை, தொட்டிப்பாளையத்தில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான இனிப்புக் கடை உள்ளது. இந்த கடையில் தயாரிக்கப்படும் 'மூலிகை' மைசூர்பாவை உண்டால், ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகி வருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் சின்னியம்பாளையம், ஆர்ச்சிப்புதூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பா அளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் குணமாகி வந்ததாக கடை உறிமையாளர் ஸ்ரீராம் கூறியிருந்தார்.


latest tamil news



இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மூலிகை மைசூர்பா தயாரித்த கடையின் உரிமையாளர் ஸ்ரீராமிடம் விசாரணை மேற்கொண்டனர்.' அரசின் உரிய அனுமதி இல்லாமல் இது போன்ற உணவு தயாரிப்பு செய்ததை தவறு எனக் கூறிய அதிகாரிகள், அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர். கடையில் இருந்த, ரூ.1 லட்சம் மதிப்புள்ள, 120 கிலோ மைசூர்பாவை பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X