இன்று வாரணாசி என்.ஜி.ஒ.க்களுடன் மோடி கலந்துரையாடல்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 08, 2020
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, PM Modi, interact, NGOs, Lok Sabha constituency, Varanasi

புதுடில்லி: பிரதமர் மோடி தனது வாரணாசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட என்.ஜி.ஓ. க்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம்இன்று (ஜூலை 9) கலந்துரையாடுகிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது: ஊரடங்கின் போது வாரணாசியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஒ. நிறுவனங்கள் 20 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 2 லட்சம் ரேஷன் பொருள் பொட்டலங்களையும் மாவட்ட நிர்வாகத்தின் உணவு மையம் வாயிலாகவும், தமது சொந்த முயற்சிகளாலும் விநியோகித்தன.


latest tamil news



தவிர, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் விநியோகிக்க இந்த நிறுவனங்கள் உதவின. இந்நிறுவன பிரதிநிதிகளுடன் இன்று ( ஜூலை.9) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது வாரணாசி தொகுதி மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தடையின்றி விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து விவரங்களை கேட்டறிகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X