பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பலம் போலீஸ் ஸ்டேசன் பெண் போலீசுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் பாராட்டு..!!!

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டியை, ஐதராபாத்தில் வசிக்கும் மகளின் வீட்டிற்கு செல்வதற்கு உதவிய பெண் போலீசை, நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தார்.கடந்த 29ஆம் தேதி R-1 மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், சென்னை தி்.நகர் நீலகண்ட மேத்தா

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டியை, ஐதராபாத்தில் வசிக்கும் மகளின் வீட்டிற்கு செல்வதற்கு உதவிய பெண் போலீசை, நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தார்latest tamil news


.கடந்த 29ஆம் தேதி R-1 மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், சென்னை தி்.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது தாய் வசந்தா, தனியாக வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவரை அழைத்து வர இயலவில்லை.ஆகவே, தாய்க்கு பாஸ் மற்றும் விமான டிக்கெட் எடுத்துள்ளதால், சென்னை விமான நிலையம் வரை அவரை அழைத்துச் செல்ல உதவி தேவை என்று கூறியுள்ளார்.

உடனே மாம்பலம் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் மகாலட்சுமி, மேற்படி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று மூதாட்டி வசந்தா சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, அவரது மகள் கூறிய விபரம் மற்றும் ஜூலை 1-ஆம் தேதி விமானத்தில் ஐதராபாத் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.

அதன் பெயரில் ஒன்றாம் தேதி அன்று, வசந்தாவின் வீட்டிற்குச் சென்ற மகாலட்சுமி, அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு தனியார் காரில் விமான நிலையம் அழைத்து சென்றார். இதற்காக ஆன செலவையும் அவர் ஏற்று கொண்டார். மேலும், விமான நிலையத்தில்,போர்டிங் பகுதி வரை சென்று விமானத்தில் அனுப்பி வைத்தார். ஐதராபாத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்து மகிழ்ச்சியில் வசந்தாவும், அவளது மகளும், மகாலட்சுமிக்கு நன்றி தெரிவித்தனர்.


latest tamil newsமேலும் பெண் போலீசின் மகத்தான உதவியை பாராட்டி சமூக வலைதளத்தில், தமிழ்நாட்டு போலீசுக்கு, நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். மேலும் R1மாம்பலம் போலீசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, வசந்தாவும், அவரது மகளும் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தக்க சமயத்தில் மூதாட்டிக்கு உதவிய மாம்பலம் மகாலட்சுமியை நேரில் அழைத்த, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுக்களை தெரிவித்து அவருக்கு வெகுமதியை வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-ஜூலை-202017:48:23 IST Report Abuse
Tamilnesan நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. நல்வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
10-ஜூலை-202012:36:53 IST Report Abuse
ponssasi உங்களை போன்ற நேர்மையான சமூக அக்கறையுள்ள காவலர்களுக்கு மக்களாகிய நாங்கள் என்றும் கடமைப்பட்டு உள்ளோம், காவல் துறையில் உங்களை போன்ற ஒரு விதை பல்லாயிரமாக பெருகி காவல் துறை ஒரு சோலைவனமாக மாறவேண்டும் என்பது எங்களின் ஆவல்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
10-ஜூலை-202011:40:31 IST Report Abuse
Rameeparithi வாழ்த்துக்கள் பெண் போலிஸாருக்கு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X