பொது செய்தி

தமிழ்நாடு

'கோவையில் அதிகரிக்கும் பாதிப்பு; இனியும் வேண்டாம் அலட்சியம்': சுகாதாரத்துறை எச்சரிக்கை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவையில் இன்று ஒரே நாளில், 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 927 ஆகவும்; இறப்பு எண்ணிக்கை ஒன்பதாகவும் உயர்ந்துள்ளது.



latest tamil news



கோவை, பொள்ளாச்சி அடுத்த நல்லிக்கவுண்டம் பாளையத்தில், கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரிந்து வரும், 13 வடமாநில தொழிலாளர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்னூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த, 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள், அனைவரும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட இருப்பிடத்தின் அருகில் அல்லது அவர்கள் சென்று வந்த பகுதியில் எடுக்கப்பட்ட மாதிரியில் 'பாசிட்டிவ்' ஆனவர்கள். அதேபோல், மரக்கடை பகுதியில் இயங்கி வந்த, எலக்ட்ரிக் கடை ஒன்றின் பணியாளர்கள், 10 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்து 'பாசிட்டிவ்' ஆனவர்கள். இப்படி இன்று 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 927 ஆக உயர்ந்துள்ளது. 'இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000 தொடும்' என, சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்திருப்பது, கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


latest tamil news




இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'கோவை, வீரபாண்டி பிரிவை சேர்ந்த 65 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் ஜூலை 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில், இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. ஒத்தக்கால் மண்டபம் மற்றும் போத்தனூரை சேர்ந்த கர்ப்பிணிகள் கொரோனா பாதிப்புடன் இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெற்று வந்தனர். இருவருக்கும் இன்று அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளனர். இதுவரை, இங்கு, 5 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது' எனத் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
(Original) Nakkeran - Coimbatore,இந்தியா
10-ஜூலை-202010:08:44 IST Report Abuse
(Original) Nakkeran தமிழக அரசு சென்னையை மட்டும் தான் எப்போதுமே தமிழ்நாடாக பார்க்கிறது. மற்ற மாவட்டங்களை பற்றி கவலை கொள்வதில்லை. கோவையில் பிற மாவட்டங்களை சேர்ந்தோர் இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். செக்கிங் என்பதோ இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X