2021ல் இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்| Dinamalar

2021ல் இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (1) | |
புதுடில்லி: கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் இந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு குளிர்கால இறுதியில், ஒரு நாளைக்கு 2.8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.84 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் 475 கோடி மக்களிடையே

புதுடில்லி: கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் இந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு குளிர்கால இறுதியில், ஒரு நாளைக்கு 2.8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.latest tamil news


84 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் 475 கோடி மக்களிடையே நடத்தப்பட் சோதனைகளின் அடிப்படையில் தொற்று நோயியல் மாதிரி ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.அந்நிறுவனத்தின் பேராசிரியர் ஹசீர் ரஹ்மன்தாத் மற்றும் ஜான் ஸ்டெர்மென், தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா, மற்றும் அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஈரான், இந்தோனேஷியா, பிரிட்டன், நைஜீரியா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் தினசரி பாதிப்பு 2.8 லட்சம் அளவில் இருக்கும் என கணித்துள்ளனர்.கணிப்புகள் கொரோனாவுக்கான சோதனைகளை அடிப்படையாக கொண்டவை மற்றும் எதிர்காலத்தில் இவை துல்லியமாக இருக்கும் என்றும் சொல்லவும் முடியாது. ஆனால் கடுமையான, அதிக எண்ணிக்கை அளவிலான கொரோனா பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவை எதிர்காலத்தில் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் என நம்பலாம்.ஆய்வாளர்கள், தொற்றுகளின் எண்ணிக்கையை கொரோனா சோதனைகளின் விகிதம், மற்றும் சோதனைகளின் விகிதம் அதிகரிக்கப்டுவது, மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கின்றனர். அதிகரிக்கப்பட்ட கொரோனா சோதனைகள் மூலம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் அதிக நோயாளிகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது.ஆனால் மக்கள் நடவடிக்கை, மக்களுக்கு இடையே ஏற்படும் தொற்று, சோதனைகளின் எண்ணிக்கை, மருத்துவ வசதி, உயரிழப்பு எண்ணிக்கை ஆகியவற்றை கொண்டே ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றோடு அறிகுறிகள் இல்லாத தொற்று, வைரஸ் பரவல் வேகம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது.


latest tamil news


தொற்று கண்டறியப்பபடாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மந்தை எதிர்ப்பு சக்தி மூலம் இந்த பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X