மதச்சார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள்: மம்தா குற்றச்சாட்டு

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (22) | |
Advertisement
கோல்கட்டா: கொரோனாவை காரணம் காட்டி, சிபிஎஸ்இ., பாடங்களில் 30 சதவீதத்தை குறைப்பதாக கூறி, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்களை நீக்கி விட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டின் சூழலை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 30 சதவீதத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Mamata, Mamata Banerjee, cbse, syllabus, classes, students, education, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: கொரோனாவை காரணம் காட்டி, சிபிஎஸ்இ., பாடங்களில் 30 சதவீதத்தை குறைப்பதாக கூறி, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்களை நீக்கி விட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டின் சூழலை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 30 சதவீதத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனாவை காரணம் காட்டி 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 9, 11ம் வகுப்புகளில் அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச்சார்பின்மை ஆகிய பாடங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. இதே போல் பொருளாதாரத்திலும் சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனாவை காரணம் காட்டி, தனக்கு தகுந்தவாறு திட்டமிட்டு பயன்படுத்திய பா.ஜ., ஆதரவாளர்கள், அவர்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டார்கள். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
09-ஜூலை-202016:52:25 IST Report Abuse
Selvaraj Chinniah மத சார்பின்மை ஏன் வேண்டும்? ஒரு இந்து,ஒரு முஸ்லீம், ஒரு கிறிஸ்டின் ஒரு பள்ளியில் படிக்கும்போது மூன்று மாணவர்களுக்கும் ஒரேவிதமான சடட திடடம், சலுகை கடை பிடிக்க படுதா? மூன்று பேரையும் சமமாக பாவித்தால், இந்தியா மத சார்பின்மையை நாடு என்று சொல்லலாம். நிலைமை என்ன? பிறகு மத சார்பின்மை ஏன் வேண்டும்? இந்திய பாட திட்டத்தில். "கஜினி 17 முறை போராடி சோமநாத கோவிலை பிடித்தார்" என்பதற்கு பதில் "கொள்ளை அடித்தான்" என்றல்லவா இருக்க வேண்டும். "16 முறை நமது மன்னன் போராடி திருடனை விரட்டினான்" என்றல்லவா இருக்க வேண்டும். "மொஹலாயர்கள் இந்தியாவை கொள்ளை அடித்து,கடடாய மதம் மாற்றினார்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். "கிறிஸ்தவர்கள் இந்தியாவை கொள்ளை அடித்து,கடடாய மதம் மாற்றினார்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். இந்தியாவில் இந்துக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? இந்து கோவில்களை சுதந்திரத்துக்கு முன்பு. "வந்தவர்கள் கொள்ளையடித்து, இடித்து தள்ளினர்" இது வரலாறு. ஆனால், தற்போது,வந்தவர்களும்,பதவியில் உள்ளவர்களும் இந்து கோவில்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்,இடித்து தள்ளுகின்றனர் இப்படிப்படட நிலமையில் மதசார்பின்மை வேண்டுமா?
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
09-ஜூலை-202016:34:22 IST Report Abuse
ocean kadappa india மத சார்பின்மையை குரோனா வந்த பின் தனி மனித சமுக இடை வெளி தடுக்கிறதே அம்மணி. குரோனா வலியுறுத்தும் தனிமனித சமுக இடைவெளியால் இனி மனிதர்களிடம் புறத்தூய்மை வளரும். சிகரெட் மது கண்ட கண்ட இறைச்சிகள் போன்ற உடலுக்கு தீங்கு தரும் பழக்கங்கள் நீங்கும்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
09-ஜூலை-202012:37:12 IST Report Abuse
Sridhar இந்த அம்மணி மாணவர்களையும் விட மாட்டார் போல. மதச்சார்பின்மை எதற்கு? ஆடு வெட்டுவதை ரசிக்கவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X