காஷ்மீரில் பா.ஜ. பிரமுகர் உள்பட மூன்று பேர் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Kashmir. BJP leader, family. shot dead. militants. Bandipora

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பா.ஜ. பிரமுகர் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பா.ஜ. மாவட்ட தலைவராக உள்ளார். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news





சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகள் பயங்கரவாதிகள் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் வாசிம் பாரிக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததால், உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்புக்கு இல்லாத நேரம் பார்த்து இந்த சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
09-ஜூலை-202010:25:57 IST Report Abuse
Anand நம்ம பபூன், சுடலை, உண்டியல் குளுக்கீஸ், புருமா, ஓசிசோறு, மற்றும் ஏனைய மதம்மாறி பேர்வழிகளுக்கு இந்த செய்தி மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும், மேலும் இந்த மாபாதக செயலில் ஈடுபட்ட அந்த தீவிரவாதிகளுக்கு இவர்கள் மிகப்பெரிய வெகுமதி அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கொன்றுமில்லை...
Rate this:
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
09-ஜூலை-202012:20:54 IST Report Abuse
Raja Narasiman Vivekநமக்கும் ரொம்ப கட்சி பக்தி முத்தி போன இப்படிதான் ஒரு நாள் நடக்கும் அடங்கி இருப்போம் அமைதியாக வாழ்வோம்...
Rate this:
Cancel
V JAYAPRAKASH - chennai,இந்தியா
09-ஜூலை-202010:03:11 IST Report Abuse
V JAYAPRAKASH இதை ஏன் எந்த மாற்று மதத்தினரும் கண்டிப்பதில்லை ,இங்கு புரிந்த விஷயம் தீவிரவாதிகள் மதத்தலைவர்கள் மனநிலை மாரி தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரண்டால் தான் காஷ்மீரில் தீவிரவாதம் முடியும்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
09-ஜூலை-202007:50:21 IST Report Abuse
natarajan s இவர்களுக்கு மொத்தமாக 7 பாதுகாப்பு அதிகாரிகள் கொடுக்க பட்டு உள்ளது. சம்பவம் நடந்த சமயம் ஒருவர் கூட பாதுகாப்பு பணியில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X