பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 301 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020
Share
Advertisement
kerala, corona, positive, toll, கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதயைடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,196 ஆக அதிகரித்துள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் இதுவரை 3,561 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். 2,605 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 99 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 95 பேர் பிற மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் என்றும் மீதி 90 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் தெரிய வந்துள்ளது.


latest tamil news


அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 64 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 46 பேரும், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X