வெவ்வேறு சமூகத்தினரின் கொரோனா தொற்று உடல்கள் மாற்றம் :எய்ம்சில் அவலம்| Dinamalar

வெவ்வேறு சமூகத்தினரின் கொரோனா தொற்று உடல்கள் மாற்றம் :எய்ம்சில் அவலம்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்த வெவ்வேறு சமுதாயத்தினரின் உடல்கள் மாற்றப்பட்ட அவலம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது.



latest tamil news



கொரோனா தொற்று காரணமாக டில்லி எய்ம்ஸ் பல்லாயிரக்கணக்கோனார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து உள்ளனர். நூற்றுக்கணக்கில் மட்டுமே சிகிச்சை பலனளிக்காமல் பலியாகின்றனர்.

இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இருவரும் ஒரே நேரத்தில் மரணம்அடைந்தனர். தொடர்ந்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் உடலுக்கான இறுதிசடங்கை செய்திருந்தனர்.


latest tamil news



இதனிடையே உடல்கள் மாறிஇருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக மருத்துவமனை சலசலப்பு உருவானது. இது குறித்து மருத்துவதுறையை சேர்ந்த மூத்த அதிகாரி கூறுகையில், கொரோனாவால் பாலியானவர்களின் உடல் விதிமுறைகளின் படி சுத்தரிகரிக்கப்பட்டு போர்த்தப்ப்டடு குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினர்கள் இறந்தவரை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அடையாளங்கள் குறித்து குடும்பத்தினரிடம் கேட்கப்படுகுகிறது. தொடர்ந்து பிரதே பரிசோதனை நடத்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X