பொது செய்தி

இந்தியா

நவ., வரை இலவச ரேஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கால் பொருளா தார பாதிப்பை சந்தித்து உள்ள, 81 கோடி ஏழை மக்களுக்கு, நவ., மாதம் வரை, இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை சமாளிக்கும் வகையில், ஏழை, எளிய மக்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களுக்கு பல சலுகைகள், திட்டங்களை மத்திய அரசு
கொரோனா, ஊரடங்கு, இலவச_ரேஷன், அரிசி, பொருளாதாரம், மத்திய அரசு, ஏழைகள், ஒப்புதல்

புதுடில்லி: ஊரடங்கால் பொருளா தார பாதிப்பை சந்தித்து உள்ள, 81 கோடி ஏழை மக்களுக்கு, நவ., மாதம் வரை, இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை சமாளிக்கும் வகையில், ஏழை, எளிய மக்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களுக்கு பல சலுகைகள், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு, ரேஷனில், நபருக்கு, தலா, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் குடும்பத்துக்கு, 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை, நவ., மாதம் வரை நீட்டிப்பதாக, பிரதமர், நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளதாவது:

* ஏழை, எளிய மக்களுக்கு, இலவச ரேஷன் வழங்கும் திட்டம், நவ., வரை நீட்டிக்கப்படுகிறது. பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், 81 கோடி மக்கள் பயன் பெறுவர். இந்த திட்டத்துக்காக, மொத்தம், 8 மாதங்களில், 1.49 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடுகிறது.

* 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, இலவச சமையல்,'காஸ்' இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

* ஏப்ரல் - ஜூன் மாதத்துக்கு தரப்பட்ட இந்த சலுகை, தற்போது, செப்., வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 7.4 லட்சம் ஏழை பெண்கள் பயன் பெறுவர். இதற்காக, 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை அரசு செலவிடும்.

* இதைத் தவிர, சில குறிப்பிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியை, மத்திய அரசே செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, நிறுவனத்தின் சார்பில், 12 சதவீதம் மற்றும் ஊழியரின் சார்பில், 12 சதவீதம் என, 24 சதவீதத்தையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த திட்டம், ஜூன் முதல் ஆகஸ்ட் என, மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நாடு முழுதும், 72 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். இதற்காக, அரசு, 4,860 கோடி ரூபாய் செலவிடும்.

* புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, குறைந்த வாடகையில் வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுதும் வாடகை வீடு தொகுப்புகள் கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, மத்திய அரசு, 600 கோடி ரூபாயை செலவிட உள்ளது. நாடு முழுதும், மூன்று லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர் பயன்பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.


வாழ்க்கையை மாற்றும்!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என, முழுமையாக நம்புகிறேன்.
- நரேந்திர மோடி, பிரதமர்

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
09-ஜூலை-202019:20:46 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்திய அரசு நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம்னு சொல்லியிருக்காங்க அரிசி, கோதுமை, பருப்பு ஏதோ சொல்லியிருக்காங்க..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி இலவசமா தருகிறார்கள் ஜீனி, பருப்பு ஊரடங்கு உத்தரவு போட்டு போட்டு இலவசமா தருகிறார்கள் ஜூலை 2020 நவம்பர் வரை தமிழ்நாட்டில் எதுமாதிரி தெரியவில்லை..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் கோதுமை, ஜீனி, பருப்பு எதுமாதிரி தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
09-ஜூலை-202017:08:37 IST Report Abuse
Rajas 2014-ம் ஆண்டு ரங்கராஜன் கமிட்டி அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 36.3 கோடி பேர். இப்போது 80 கோடி பேர்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
09-ஜூலை-202013:44:56 IST Report Abuse
Tamilnesan ரேஷன் கடைகள் கொரநா பரப்பும் கடைகளாக மாறி விட்டன. இதை தடுப்பதற்கு, ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் ஆயிரம் ஜன் தன் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதன் மூலம் கொரநா முற்றிலும் ஒழிந்து விடும். மேலும், இந்த நடைமுறையை நிரந்தரமாக தொடர வேண்டும். இதனால், ரேஷனில் தரமற்ற பொருள்களை வாங்க வேண்டிய நிர்பந்தம் பொது மக்களுக்கு ஏற்படாது. மேலும், ரேஷன் ஊழியர்கள் எடை குறைவாக உணவு பொருட்களை கொடுத்து, அதில் சில ஆயிரங்கள் கொள்ளை அடிப்பது முற்றிலும் தவிர்க்கப்படும். ஒரு கார்டுக்கு ஆயிரம் ருபாய் என்பது, டாஸ்மாக் வருமானத்தில் ஒரு சதவிகிதம் தான் அரசுக்கு செலவாகும். பொது மக்களும் அந்த ஆயிரம் ரூபாயில் தமக்கு தேவையான தரமான உணவு பொருட்களை கடைகளில் வாங்கி கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X