பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் 92 சதவீத கொரோனா படுக்கைகள் காலி

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

/ஐதராபாத் : தெலுங்கானாவில் அரசு மருத்துவமனைகளில் 92.2 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் பலரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று படுக்கைகள் இல்லாமல் ஏமாறுவதற்கு பதிலாக அரசு மருத்துவ மனைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 17,081 கொரோனா படுக்கைகளுக்காக அமைக்கப்பட்டது. அவற்றில் 11,928 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுக்காகவும், 3,537 ஆக்சிஜன் படுக்கைகளுக்காகவும், 1,145 தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கை மற்றும் 471 வென்டிலேட்டர் படுக்கைகள் என தெரிவிக்கப்பட்டது. நேற்று நிலவரப்படி, அரசு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி 7.8 சதவீதமாகவும், மொத்தம் 92.2 சதவீத படுக்கைகள் காலியாகவும் உள்ளன.


latest tamil news



கடுமையாக நோய் தொற்று பாதித்தவர்களை கண்டு, சிகிச்சையளிக்க காந்தி மருத்துவமனை அடையாளம் காணப்பட்டு உள்ளது. ஐதராபாத்தின் சந்தேகத்திற்குரிய (தொற்று) நபர்கள், மிமான அறிகுறியுள்ள பாதிக்கப்பட்டவர்கள் கிங் கோட்டி மாவட்ட மருத்துவமனை, அரசு காய்ச்சல் மற்றும் மார்பு மருத்துவமனை ஆகியவற்றில் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நிறுவன தனிமைப்படுத்துதலை கோரும், அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறி நோயாளிகள் நேச்சர் க்யூர் மருத்துவமனை, அரசு நிஜாமியா மருத்துவமனை, அரசு ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் அரசு ஹோமியோபதி மருத்துவமனை ஆகியவற்றில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



மருத்துவ தேவைகளின் அடிப்படையில், படுக்கைகள் வழங்கப்படும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் மருந்துகள் போதுமான அளவு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
09-ஜூலை-202006:52:38 IST Report Abuse
தல புராணம் முதல்வரையும் காணவில்லை என்கிறார்களே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X