ஊரடங்கால், பல நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. வங்கிகள் நிலையும் மோசமடைந்துள்ளது. இது பற்றி, நான் பல முறை எச்சரித்த போது, என்னை, பா.ஜ.வினரும், ஊடகத்துறையினரும் ஏளனம் செய்தனர். ஆனால், நான் உண்மையை தான் தெரிவித்துள்ளேன் என்பது, சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கையில் உறுதியாகியுள்ளது.
ராகுல், எம்.பி., காங்கிரஸ்
நேருவும் சென்றுள்ளார்
பிரதமர் மோடி, லடாக்குக்கு சென்று ராணுவ வீரர்களிடம் பேசியதை பா.ஜ., வினர் பெருமையாக கூறுகின்றனர். இது ஒன்றும் அதிசயம் இல்லை. நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1962ல் சீன சண்டைக்குப் பின், லடாக்குக்கு சென்று, ராணுவ வீரர்களிடம் பேசினார்.
சரத் பவார்தலைவர், தேசியவாத காங்.,
பலனடைந்த சோனியா குடும்பம்
ராஜிவ் அறக்கட்டளையால், மக்களோ, காங்கிரசோ பயன் அடையவில்லை. சோனியாவின் குடும்பம் தான், பலனடைந்தது. ராஜிவ் அறக்கட்டளையிலிருந்து பணத்தை எடுத்து, சோனியா செலவு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஸ்மிருதி இரானி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE