பொது செய்தி

இந்தியா

ராஜிவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு? விசாரணையை ஒருங்கிணைக்க குழு

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Foreign Funding, Rajiv Gandhi Foundation, MHA, ராஜிவ் காந்தி, அறக்கட்டளை, முறைகேடு, விசாரணை, குழு

புதுடில்லி: ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறப்பட்டதில், சட்ட விதிமீறல் நடந்துள்ளதா என்பதற்காக நடத்தப்படும் விசாரணையை ஒருங்கிணைக்க, அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அமலாக்கத் துறையின் இயக்குனர், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய - சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர். 'சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என, பிரதமர் கூறுகிறார்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி., ராகுல் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு, பா.ஜ., தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.


புகார்:


பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூறியதாவது: நேரு - இந்திரா குடும்பத்துக்கு சொந்தமான ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு, 2004 - 09 ஆண்டுகளில், சீன துாதரகத்திலிருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது. சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, இந்த நன்கொடை, லஞ்சமாக பெறப்பட்டதா... இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்த விவகாரத்தில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியது. தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டினர். இந்நிலையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக சாட்டையை சுழற்றியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று கூறியதாவது:


latest tamil news


நேரு - இந்திரா குடும்பத்துக்கு சொந்தமான ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ராஜிவ் காந்தி, 'சாரிடபிள் டிரஸ்ட்' மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை, வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடை தொடர்பாக புகார் எழுந்துள்ளது. நன்கொடை பெற்றதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம், வருமான வரிச் சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் ஆகிய சட்டங்களின் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பரபரப்பு:


இந்த விசாரணையை ஒருங்கிணைக்க, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, மத்திய அமலாக்கப் பிரிவின் இயக்குனர், தலைவராக இருப்பார். இவ்வாறு, அவர் கூறினார். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

'இந்த விசாரணையின் முடிவில், பல அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம். ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜிவ் காந்தி அறக்கட்டளை, 1991ல் அமைக்கப்பட்டது. 'முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவின் கனவான, நவீன இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை செயல்படும்' என, அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா, இதன் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர், இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.


சீனா விவகாரம் என்னாச்சு?


ராஜிவ் காந்தி அறக்கட்டளை பெற்ற நன்கொடை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து, காங்கிரசை சேர்ந்த ஜெய்வீர் செர்ஜில் கூறியதாவது: இந்திய - சீன எல்லை பிரச்னையில், மத்திய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டியதால், அறக்கட்டளை விவகாரத்தை கையில் எடுத்து, மிரட்டிப் பார்க்க நினைக்கின்றனர்.

சீனாவுடன் மோதல் போக்கை பின்பற்றுவதற்கு பதில், காங்கிரசுடன் மோதுகின்றனர்; இதற்கெல்லாம், காங்கிரஸ் பயப்படாது. மத்திய அரசின் தவறுகளை, மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். மத்திய அரசின் மோசமான வெளிநாட்டு கொள்கையால், 20 வீரர்களை நாம் இழந்துள்ளோம். இந்த விஷயத்தில், காங்கிரஸ் மீது பாய்வதற்கு பதிலாக, நாட்டின் நலன் கருதி, மத்திய அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


அரசியல் நோக்கம் இல்லை!


அறக்கட்டளை விவகாரம் குறித்து, பா.ஜ., பொதுச் செயலர் முரளிதர ராவ் கூறியதாவது: ராஜிவ் அறக்கட்டளை தொடர்பான விசாரணை, அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கூறுவது தவறு. நாங்கள், 2014ம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்து விட்டோம். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என நினைத்தால், ஆட்சிக்கு வந்ததுமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டுமே... நாங்கள் அப்படி செய்யவில்லை.

வெளிநாட்டு நன்கொடை தொடர்பான விஷயத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என, நினைக்கிறோம். எனவே, இது இயற்கையான விசாரணை தான்; இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க கூடாது. சமீபகாலமாக, நன்கொடை விஷயத்தில், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.


மிரட்ட முடியாது!


இந்த உலகில், எல்லாவற்றுக்குமே ஒரு விலை உள்ளது என, பிரதமர் மோடி நினைக்கிறார். எல்லாரையும் மிரட்ட நினைக்கிறார். ஆனால், உண்மைக்காக போராடுவோருக்கு எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது; அவர்களை மிரட்டவும் முடியாது என, பிரதமருக்கு புரியவில்லை போலிருக்கிறது.
-ராகுல், காங்கிரஸ் எம்.பி.,

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki_64 - Chennai,இந்தியா
09-ஜூலை-202019:27:05 IST Report Abuse
Ramki_64 ஸ்பெக்ட்ரம் ஊழலையே அசாதாரணமாக செய்த காங்கிரஸ் கு இதெல்லாம் ஜுஜுபி
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
09-ஜூலை-202016:44:13 IST Report Abuse
Ramasami Venkatesan நமக்கு வேண்டியது நாட்டுக்காக உழைக்கும் ஒரு தன்னலமற்ற தலைவர்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
09-ஜூலை-202015:38:55 IST Report Abuse
Rameeparithi //உண்மைக்காக போராடுவோருக்கு எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது-ராகுல் // இன்றைய தின சிறப்பு ஜோக் யாரெல்லாம் உண்மையைப் பற்றி பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா ...? ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X