சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சொல்லால் அடித்த' மகளிர் போலீசார்: மைனர் பெண் விஷமருந்தி தற்கொலை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருச்சி; கர்ப்பிணியான, 17 வயது மைனர் பெண் புகாரில், நடவடிக்கை எடுக்காத மணப்பாறை மகளிர் போலீசார், கேவலமாகவும் பேசியதால், அப்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி, மணப்பாறை அருகே, கவரப்பட்டியைச் சேர்ந்த, ௧௭ வயது மைனர் பெண். கூலித்தொழிலாளியின் நான்காவது மகளான இவர், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். உறவினரான ராம்கி, 22, என்பவரை காதலித்துள்ளார்.திருமணம் செய்வதாக
 'சொல்லால் அடித்த' மகளிர் போலீசார்: மைனர் பெண் விஷமருந்தி தற்கொலை

திருச்சி; கர்ப்பிணியான, 17 வயது மைனர் பெண் புகாரில், நடவடிக்கை எடுக்காத மணப்பாறை மகளிர் போலீசார், கேவலமாகவும் பேசியதால், அப்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, மணப்பாறை அருகே, கவரப்பட்டியைச் சேர்ந்த, ௧௭ வயது மைனர் பெண். கூலித்தொழிலாளியின் நான்காவது மகளான இவர், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். உறவினரான ராம்கி, 22, என்பவரை காதலித்துள்ளார்.திருமணம் செய்வதாக ராம்கி கூறியதை நம்பி, கர்ப்பமானார். ஆனால், திருமணத்திற்கு ராம்கி மறுத்து விட்டார்.

5 மாத கர்ப்பிணியான அப்பெண், மணப்பாறை மகளிர் போலீசில், மே மாதம் புகார் அளித்தார். 'போக்சோ'வில் வழக்கு மட்டும் பதிவு செய்த மகளிர் போலீசார், ராம்கியை விசாரிக்கவோ, கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ராம்கி தரப்புக்கு ஆதரவாகவே, மகளிர் போலீசார் செயல்பட்டுள்ளனர். ஒரு பெண் ஏட்டு, அப்பெண்ணிடம், 'உனக்கு இந்த வயதில் படுக்கை கேட்குதா' எனவும் கேவலமாக பேசி உள்ளார்.விரக்தி அடைந்த அப்பெண், மூன்று நாட்களுக்கு முன், மணப்பாறை மகளிர் ஸ்டேஷன் முன், தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், நீதிமன்றத்தில் ராம்கி முன்ஜாமின் வாங்கி விட்டார்.

இதையறிந்த மைனர் பெண்ணும், பெற்றோரும், நேற்று காலை, மணப்பாறை மகளிர் ஸ்டேஷன் சென்று விபரம் கேட்டுள்ளனர். அப்போதும் மகளிர் போலீசார், அப்பெண்ணை கேவலமாக பேசியதாக தெரிகிறது.இதையடுத்து, வீட்டுக்கு சென்ற மைனர் பெண், வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார். மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராம்கியை பிடித்து விசாரிக்கின்றனர். திருச்சி ஐ.ஜி., ஜெயராமன், டி.ஐ.ஜி., ஆனிவிஜயா, எஸ்.பி., ஜியாவுல் ஹக் ஆகியோர், மணப்பாறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baalu - tirupur,இந்தியா
11-ஜூலை-202010:20:17 IST Report Abuse
Baalu உண்மைதான். பெண் போலீஸ் மிகவும் ஆபாசமாகத்தான் பேசுகிறார்கள். இவர்களின் குழந்தைகள் எப்படி வளரப் போகிறார்களோ?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஜூலை-202013:06:21 IST Report Abuse
A.George Alphonse பெண்ணுக்கே பெண் எதிரி.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜூலை-202008:39:48 IST Report Abuse
Sampath Kumar இதுக்கா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X