மல்லையாவை திவாலானவராக அறிவிக்க மீண்டும் வலியுறுத்தல்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லண்டன்: வங்கி கடன் மோசடி தொடர்பாக, தொழிலதிபர், விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்க, வங்கிகள் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் தப்பியோடி விட்டார்.இப்போது, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். அவரிடம் இருந்து, கடனை வசூலிப்பதற்காக, மல்லையாவை திவாலானவராக அறிவிக்க வேண்டும் என, இந்தியன் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு, லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


latest tamil news


இந்த வழக்கை, கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிபதி, மைக்கேல் பிரிக்ஸ்,'மல்லையா, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டம் குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ளார்.'இந்த வழக்குகளில் உத்தரவு வரும் வரை , கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு, லண்டன் உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகள் சார்பில், திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'கடனை திருப்பி செலுத்துவதாக, மல்லையா அறிவித்துள்ளதை, தண்ணீரில் எழுதி வைத்த கதையாகவே கருத வேண்டும். அதனால், அவரை திவாலானவர் என, உடன் அறிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூலை-202010:55:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா செட்டிமார்களிலே திவாளனா மினிமம் ஒருகோடிலே சொத்து இருக்கும் என்று அருத்தமுங்கோ இதனால் நாட்டுக்கே கேடுதான் விளையும் சத்தியம் இவனெல்லாம் ஒன்னம்நம்பர் பொறுக்கிகளேதான் பணம் பொருக்கி பணமிருந்தால் எவ்ளோவேனாலும் ஆட்டம்போடுவானுக கேரெக்டரே இல்லாத கஸ்மாலங்கள் எல்லாத்தையும் புடுங்கிக்கின்னு தெருவிலே வச்சு சுட்டுத்தள்ளவேண்டும் பத்துபேரைஒளிச்சாள் போதும் பணவெறிபிடிச்ச ...ங்க பணவெறி அடங்குதான்ன்னுபாக்கலாம் உழைக்காமல் காசு சேர்த்த எல்லோரும் பிராடுகளேதான் மக்களை ஏமாற்றி கோடிக்கல்லே மிதக்கும் எல்லா கட்சிக்காரனுகளும் இதுலே அடக்கம் என்பது சத்தியம்
Rate this:
Cancel
kuruvi - chennai,இந்தியா
09-ஜூலை-202008:28:36 IST Report Abuse
kuruvi பொதுவாக கடன் வாங்குபவன் தான் நான் திவாலாகிவிட்டேன் ,என்னால் கடனை திருப்பிக்கட்டமுடியவில்லை என்று Insolvancy. பெட்டிஷன் பைல் பண்ணுவதை கேள்விப்பட்டிருக்கிறேன் .கடன்கொடுத்தவர் திவாலாகிவிட்டதாக அறிவிக்க கோருவத்தினால் என்ன பலன் என்று தெரியவில்லையே .அடமானசொத்துக்கள் இருக்கும்போதே வசூலிக்க முடியாதவர்கள் அவர் திவாலாகிவிட்டபிறகு எப்படி வசூலிப்பார்கள்?
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
09-ஜூலை-202012:46:26 IST Report Abuse
R Ravikumaryedhum satta sikkal irukkalam...
Rate this:
Cancel
09-ஜூலை-202007:00:07 IST Report Abuse
ஸாயிப்ரியா ஆடி அடங்கும் என்ற நிலைக்கு வந்து விட்டாரா? இல்லை நடிக்கிறாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X