பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிப்பு: டிரம்ப்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Trump, donald trump, US Coronavirus, covid 19, schools

வாஷிங்டன் : அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, மாகாண அரசுகளுக்கு, அதிபர், டொனால்டு டிரம்ப் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து, நேற்று, அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:ஜெர்மனி, டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளில், எந்த பிரச்னையும் இல்லாமல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இங்கு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை, அரசியல் காரணங்களுக்காக, ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர்.நவம்பர் தேர்தலுக்கு முன், பள்ளிகள் திறக்கப்பட்டால், அரசியல் ரீதியாக அவர்களின் நிலை மோசமாகும் என, ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர். ஆனால், குழந்தைகளின் கல்விக்கு, பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதையும் மீறி பள்ளிகளை திறக்காவிட்டால், மகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-ஜூலை-202008:18:04 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் கடந்தநாட்களாக கொரோனா இரண்டாவது அலை வந்து சுமார் நீட்டிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால், விக்டோரியா மாநில முதலமைச்சர் பதவி விளக்கணும் என்று கோஷம் எழுந்துள்ளது. ஆனால் பல இலட்சம் இறந்து, பல இலட்சம் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி அடாவடியாக இன்னும் பதவியில் இருக்கிறார். ஆறு வாரங்களுக்கு விக்டோரியா மாநிலம் லோக் டவுன் செய்யப்படுகிறது இன்றில் இருந்து.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
09-ஜூலை-202003:11:59 IST Report Abuse
Anandan பாவம் பள்ளி குழந்தைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X