பிரதமராக ஒலி தொடருவாரா? நாளை ஆலோசனை!

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
nepal, nepal pm, prime minister K.P. Sharma Oli, politics


காத்மாண்டு, : நேபாள பிரதமராக, கே.பி. சர்மா ஒலி தொடருவாரா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கான, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம், நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நாளை நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது .

நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆளும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக, பிரதமர், கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர், புஷ்ப கமல் தஹால் பிரசந்தா உள்ளனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், 2018ல் ஒன்றிணைக்கப்பட்டு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.


latest tamil news



அரசியல் குழப்பம் நிறைந்த நேபாளத்தில், 2018 பிப்.,ல் பிரதமராக பதவியேற்ற ஒலி, 850 நாட்களுக்கு மேலாக அந்தப் பதவியில் தொடர்கிறார். இதற்கு முன், 1991 - 1994ல் நேபாள காங்கிரஸ் கட்சியின் கிரிஜா பிரசாத் கொய்ராலா, நீண்ட காலம் பிரதமராக இருந்துள்ளார்.நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில், கடந்த சில மாதங்களாகவே புகைச்சல் இருந்து வருகிறது. 'ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் விதிகளின்படி, ஏதாவது ஒரு பதவியில் இருந்து, ஒலி விலக வேண்டும்' என, மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலெக், காலாபானி உள்ளிட்ட பகுதிகளை அடக்கிய நேபாளத்தின் புதிய தேசிய வரைபடத்தை, ஒலி வெளியிட்டார்.இதையடுத்து, இந்தியா - நேபாளம் இடையே உரசல் ஏற்பட்டது. மேலும், இந்தியாவின் துாண்டுதலால் கட்சியில் தனக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது ஒரு புறம் இருக்க, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையில், சீனா நேரடியாக தலையிட்டுள்ளது.

நேபாளத்துக்கான சீன துாதர் ஹோவ் யாங்கி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண முயன்றார். இது, மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னை தொடர்பாக விவாதிப்பதற்காக, 44 பேர் உறுப்பினர்களாக உள்ள, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தது. இந்தக் கூட்டம், ஏற்கனவே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று நடப்பதாக இருந்த கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்தக் கூட்டம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
09-ஜூலை-202014:14:45 IST Report Abuse
மு. செந்தமிழன் ஒலி ஒலி ...ன்னு சொல்லி கடைசில ஒழிச்சே விட்டானுங்க சீன பசங்க
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
09-ஜூலை-202010:42:43 IST Report Abuse
Balasubramanian Ramanathan பஞ்சாயத்து தலைவர் டேனியல், மற்றும் மன்ற உறுப்பினர்கள் முத்தரசு, ராமகிருஷ்ணன் என்ன செய்கிறார்கள். ஒருங்கினைப்பாளர் குணா தூங்காதே.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-ஜூலை-202005:12:29 IST Report Abuse
blocked user கம்மிகளின் பேச்சும் செயலும் சம்பந்தமில்லாமல் இருக்கும் என்பதற்கு இவர்கள்தான் நல்ல உதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X