பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடியின் ரூ 329 கோடி சொத்து: அமலாக்கத்துறை முடக்கம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி; வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின், 329 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கிஉள்ளது.



latest tamil news


நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நிரவ் மோடி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை, சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது, அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க, தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


அதன்படி, மும்பை யில், வொர்லி பகுதியில் உள்ள, 'சமுத்ர மஹால்' எனும் குடியிருப்பு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள, காற்றாலை நிறுவனம். லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்குகள், வங்கி டிபாசிட்டுகள் ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
09-ஜூலை-202014:56:20 IST Report Abuse
Raj நீரவ் மோடி ரேஷன் கார்டை பறிமுதல் செய்து கொடுக்கக்கூடாது
Rate this:
Cancel
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-202012:13:09 IST Report Abuse
aashik ஆட்டைய போட்டது 14 ஆயிரம் கோடி ஆனால் முடக்கம் பண்ணது வெறும் 329 கோடி .. ஹா ஹா
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-ஜூலை-202009:48:35 IST Report Abuse
பாமரன் சிங்கம்லே.... சீனாவுக்கு அவிங்க ஆப்களை தடை செஞ்சு.... அவிங்க காண்டாக்ட் நம்பரையும் ஃபோன்ல இருந்து டெலீட் பண்ணி பெரிய அதிர்ச்சி (??) குடுத்த மாதிரி இங்கு நீரவ் மோடிக்கும் செஞ்சிட்டோம்ல... அப்புறம் என்ன..
Rate this:
09-ஜூலை-202011:15:02 IST Report Abuse
chandran, pudhucherry அவன் ஜெயில்ல போட்டோம்ல நாடு கடத்தி வந்து தண்டிப்போம்ல சொத்த பறிமுதல் செய்வோம்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X