பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது.



latest tamil news



சென்னையின் சில பகுதிகளில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும்.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, 9; ஊத்துக்கோட்டை, கடையநல்லுார், 8; பண்ருட்டி, தியாகதுருகம், 7; பள்ளிப்பட்டு, 6; திருவாலங்காடு, அரிமளம், காவேரிப்பாக்கம், வளவனுார், 5; காஞ்சிபுரம், திருச்செங்கோடு, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.


latest tamil news


தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, ஜூன், 1 முதல் ஜூலை, 7 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது. புதுச்சேரியில், 30 சதவீதம் மழை குறைந்துள்ளது.திருநெல்வேலி, 60; சென்னை, 49; கடலுார், 38; நாமக்கல், திருவள்ளூர், 25; துாத்துக்குடி மாவட்டங்களில், 36 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கரூர், 247; பெரம்பலுார், 118; ராமநாதபுரம், 204; சிவகங்கை, 48; திருச்சி, 76; புதுக்கோட்டை, 104;, திண்டுக்கல் மாவட்டங்களில், 78 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
09-ஜூலை-202012:19:16 IST Report Abuse
 Sri,India என்ன தான் மழைவெள்ளம் வந்தாலும் நாங்கள் லாரி தண்ணீர் தான் வாங்குவோம் என மக்களும் அணைகள் , ஏரிகளையும் குளங்களையும் ஆழப்படுத்தி மழைநீரை சேகரிக்காமல் சந்திரனில் நீர் உள்ளதா என பல ஆயிரம் கோடிகளில் ஆராய்ச்சி செய்யும் அரசாங்கமும் .....??
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09-ஜூலை-202008:26:54 IST Report Abuse
NicoleThomson இயல்பு என்பது எது , இந்த மழை 1987 ஐ காட்டிலும் அதிகமா கேட்டு சொல்லுக
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
09-ஜூலை-202007:33:10 IST Report Abuse
Nalam Virumbi சென்னையை ஏமாற்றி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X