பொது செய்தி

இந்தியா

வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம்: ரயில்வே வாரியத்தலைவர்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே ரயில்வேயில் தனியார்மயமாக்கம் கொண்டு வரப்பட்டது என ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்துவதனால் எந்த வேலை வாய்ப்பும் பறிபோகாது அதே நேரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்படத்தை கொண்டு

புதுடில்லி: புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவே ரயில்வேயில் தனியார்மயமாக்கம் கொண்டு வரப்பட்டது என ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:ரயில்வே துறையில் தனியாரை ஈடுபடுத்துவதனால் எந்த வேலை வாய்ப்பும் பறிபோகாது அதே நேரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்படத்தை கொண்டு வரும்.latest tamil newsரயில்வே துறை குறைந்தபட்ச உத்தரவாத செலவை மீட்டெடுக்கும் வகையில் சிலவழித் தடங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில் ஆபரேட்டர்கள் நிர்ணயிக்கும் கட்டணம் மிக அதிகமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் ரயில்வே உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் எந்த ஒரு பயணியரும் காத்திருப்பு பட்டியலில் இருக்க மாட்டார்கள். 151 ரயில்களின் செயல்பாட்டு மூலம் ரயில்வேக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பகுதியில் உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் மேலும் அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்குவதற்கும் தற்போதுள்ள உள் கட்டமைப்பை மேம்படுத்தவும் முடியும்.


latest tamil newsதற்போதைய சூழ்நிலையில் பயணிகள் ரயில் மூலம் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். குறிப்பிட்ட வழித்தடத்தை தனியார் மயமாக்கப்படுவதால் ரயில்வே எதையும் இழக்கப்போவதில்லை. அதே நேரத்தில் ரயில்வேயின் குறைந்த பட்ச செலவை சமாளிக்க முடியும் என்பதுடன் அதற்கு மேல் வரும் வருமானம் ரயில்வேக்கு லாபமாக இருக்கும் என அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
09-ஜூலை-202017:44:14 IST Report Abuse
Rajas ரயில்வே டீசல் என்ன விலைக்கு வாங்குகிறது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் விலையில் அல்லது வரி தள்ளுபடி விலையில் வாங்குகிறார்களா. தெரிந்தவர்கள் எழுதவும். .
Rate this:
Ray - Chennai,இந்தியா
09-ஜூலை-202018:48:06 IST Report Abuse
Rayஅரசு போக்குவரத்து கழகங்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது போன வருடம் ஒரு சமயம் இனி கடன் கிடையாது இன்று ரொக்கம்னு சொல்லி அரசு பேருந்துகள் பெட்ரோல் பங்கில் போயி கால்கடுக்க நின்று கொண்டிருந்தன...
Rate this:
Cancel
09-ஜூலை-202017:08:49 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) அரசு ஊழியர்களில் மனசாட்சியோடு வேலை பார்ப்பவர்கள் ரொம்ப கம்மி , பாதி தனியாருக்கு கொடுப்பதில் தவறேதும் இல்லை
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
09-ஜூலை-202015:47:42 IST Report Abuse
JeevaKiran இதை அரசாங்கமே செய்யலாமே? அரசுக்கு திறமை இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X