அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கே சென்று பரிசோதனை; அரசுக்கு கமல் வலியுறுத்தல்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
Kamal Haasan, Corona Testing, MNM, COVID-19, coronavirus, கமல், கொரோனா, பரிசோதனை, அரசு, வலியுறுத்தல்

சென்னை: 'கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்' என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கமலின் அறிக்கை: தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர், தங்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை, அரசு கவனிக்க வேண்டும். 'தமிழகத்தில், 95 ஆய்வகங்களில், சராசரியாக ஒரு நாளைக்கு, 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது' என, அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.


latest tamil newsஇருந்தாலும், மாநிலம் முழுதும் பரவியிருக்கும் நோய் கிருமியின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவரின் அனுமதிச் சீட்டுக்காக காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என, அறிவிக்க வேண்டும். அனைத்து ஆய்வகங்களிலும், பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news


தொற்றில் முதலிடத்தில் இருந்த மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை, நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.மேலும், ஆய்வக ஊழியர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக் கைகளுடன் வீட்டிற்கே சென்று, ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும். டில்லியை போல், பரிசோதனை களின் விலையை இன்னும் குறைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூலை-202017:28:20 IST Report Abuse
theruvasagan வீடுவீடா போய் டெஸ்ட் எடுக்க கூப்புட்டப்ப அவர்களை தாக்கி அட்டூழியம் அழிச்சாட்டியம் சிலதுங்க செஞ்சபோது இந்தாளு அண்டார்டிக்காவிலயா இருந்தாரு. இப்ப சொல்ல வந்துட்டாரு அறிவுரை. நியூசுல பேரு வரணும் என்பதற்காக எத்தையாவது உளறுவதே சில உபயோகமற்ற பேருக்கு தொழில்.
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-202017:55:40 IST Report Abuse
babuEvery celebrity was giving donations to be poor to go through lockdown phase , but this idiot was releasing only songs on corona....
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
09-ஜூலை-202016:56:53 IST Report Abuse
S Ramkumar நாமாகவே சென்று மருத்துவமனைகளில் கொரோன பரிசோதனை செய்வதற்கு வசதிகள் இருக்கின்றது. அதாவது யாராவது ஒரு வார இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைக்கு எடுத்து கொள்ளுகிறார்கள். யார் வேண்டுமானால் வந்து எடுத்து கொள்ளலாம் என்று இருந்தால் திட்டம் நாறி விடும்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூலை-202016:09:19 IST Report Abuse
unmaitamil நானும் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்காக, எதோ உளறுகிறார். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X