'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து அரசியலாக்கப்படுகிறது: அமெரிக்கா கவலை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Hydroxychloroquine, US, India, White House, ஹைட்ராக்சிக்ளோரோக்வின், மருந்து, அரசியல், அமெரிக்கா, வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: ''இந்தியாவில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து, அமெரிக்காவில் அரசியலாக்கப்பட்டு, தடை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது,'' என, அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மலேரியா தடுப்பு மருந்தான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இதை, இந்தியா கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால், இந்த மருந்தை, அமெரிக்காவில் சில ஊடகங்களும், மருத்துவத் துறையில் சில பிரிவினரும் அரசியலாக்கி விட்டனர். இந்த மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என, தேவையற்ற பீதியை கிளப்பி, டிரம்புக்கு எதிரான போராக மாற்றிவிட்டனர்.


latest tamil news


இது ஆபத்தான மருந்து என்பது அபத்தமான வாதம். கொரோனா நோயாளிகளின், முதல் ஏழு நாட்கள் மிக முக்கியம். அப்போது, இந்த மருந்தை வழங்கினால், நுரையீரல் செல்களில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம். இந்த மருந்தை பயன்படுத்திய நோயாளிகளில், 50 சதவீதத்தினரின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளதை, ஜே.ஐ.டி., மருத்துவ இதழின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


latest tamil news


அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், டெட்ராய்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அவசர சிகிச்சைக்கு, ஹைட் ராக்சிக்ளோரோக்வின் மருந்தை பயன்படுத்த அனுமதி கோரி உள்ளனர். இந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைவது நிரூபணமானால், இந்த மருந்தின் பயன் குறித்து, அதிபர் டிரம்ப் கூறியது உண்மை என்பது தெரியவரும். அத்துடன், இந்த மருந்தை பயன்படுத்த தவறியதால், ஆயிரக்கணக்கானோரை பறி கொடுத்த தவறும் புரிய வரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
09-ஜூலை-202017:08:09 IST Report Abuse
Sivagiri பின்னே . . . ரெண்டு ரூபாய் மாத்திரையை நாலு ரூபா ய்க்கு விற்றால் கடுப்பா இருக்காதா ? ரெண்டு ரூபாய் மாத்திரையை எல்லோருக்கும் கமிஷன் கொடுத்து குறைந்தது ஐயாயிரம் ரூபாய்க்காவது விற்றால்தான் எல்லோரும் பிழைக்க முடியும் - (நோயாளிகளைத் தவிர )
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
09-ஜூலை-202013:30:31 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இந்த மருந்தின் பயன் குறித்து, அதிபர் டிரம்ப் கூறியது உண்மை என்பது தெரியவரும். //// டிரம்பு எந்த மெடிக்கல் காலேஜில் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குனாரு ????
Rate this:
Hari - chennai,இந்தியா
09-ஜூலை-202015:02:30 IST Report Abuse
Harikattumaram padichcha athe college thaan...
Rate this:
Cancel
09-ஜூலை-202011:05:37 IST Report Abuse
chandran, pudhucherry இங்க கொரணாவே அரசியலாக்கப்படுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X