பொது செய்தி

இந்தியா

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020
Share
Advertisement
politics, tamil nadu, tn news, பேச்சு, பேட்டி, அறிக்கை

'முதல்வர் எதை செய்தாலும், அவரை, 'ஐஸ்' வைக்க இப்போது, ஒவ்வொரு துறையினரும், இதுபோல, பாராட்டு பத்திரம் வாசிக்கத் துவங்கி விட்டனர்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி நிறைய...

'நீங்கள் தான், 100 நாட்களுக்கு மேல் ஊரடங்கு போட்டு விட்டீர்களே; அரசியல் கட்சியினரின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு தடை உள்ளதே; அதனால் தான், வீட்டில் இருந்தபடி, ஸ்டாலின் குடைச்சல் கொடுக்கிறாரோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி பேச்சு:

வீட்டின் இருட்டு அறையில் அமர்ந்து, பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு, கபட நாடகம் ஆடும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வர் குறித்து பேச, அருகதை கிடையாது.

'அதற்கு பதில், ஏழை மாணவர்களை, கட்சிகள் தத்தெடுத்து, வேண்டிய உதவிகளை செய்யலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், ஏழை மாணவர்கள், தினக்கூலிக்கு செல்கின்றனர். பட்டாசு, தீக்குச்சி தொழிற்சாலை போன்றவற்றில், பணியாற்றுகின்றனர். இதைத் தடுக்க, மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.

'முதல்வர் எதை செய்தாலும், அவரை, 'ஐஸ்' வைக்க இப்போது, ஒவ்வொரு துறையினரும், இதுபோல, பாராட்டு பத்திரம் வாசிக்கத் துவங்கி விட்டனர்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிக்கை:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த டாக்டர் சுகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் இ.பி.எஸ்., டாக்டர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்துள்ளதை பாராட்டுகிறோம்.

'எதை கொடுத்து, எதை வாங்கி என, விளக்கமாக சொன்னால் தானே, சாதாரணமானவர்களுக்கும், இரு கட்சிகளைப் பற்றியும் புரியும்...' என, சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர், வைகைச் செல்வன் அறிக்கை:


latest tamil news




கொடுத்து, கொடுத்து சிவந்தது, அ.தி.மு.க.,வினரின் கரம். வாங்கி, வாங்கி சிவந்தது, தி.மு.க.,வினரின் கரம். வாங்குவதை விட, வழங்குவது சிறந்தது என்பதை, தி.மு.க., எப்போது உணர போகிறது?

'அதாவது, பள்ளியில் சேர்ந்திருந்தாலே, 'பாஸ்' என, அறிவிக்க வேண்டும் என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:

பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் தேர்ச்சியை கணக்கிடாமல், இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

'உண்மை தான். கொரோனா, பிற வைரஸ் போல கொடியதல்ல. ஆனால், 14 நாட்கள் தனிமையும், சக மனிதர்களின் பயமும், அருவருப்பும் தான் கொடுமையானது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு:

கொரோனா நோய் கொடிய நோயல்ல. அந்த நோய்க்கு பயந்து, தற்கொலை செய்து கொள்வது தவறு. கொரோனா நோயிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மீண்டு, பிறர் உயிரை காப்பாற்ற, ரத்த தானம் செய்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X