8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
Gangster, Vikas Dubey, UP, uttar pradesh, ரவுடி, விகாஸ்துபே, கைது

கான்பூர்: உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபேவை ஒரு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து இன்று (ஜூலை 9) காலை கைது செய்தனர்.

கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டான். அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர். விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் டில்லி சொகுசு ஓட்டலில் அவன் தங்கியிருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி.,க்கு அழைத்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜூலை-202008:35:29 IST Report Abuse
Sampath Kumar இவரு எல்லாம் தீவிரவாதி இல்லை வரும் ரவ்டி??? ஒரு ரவ்டியால் எட்டு போலீசை suttu தள்ள முடித்து என்றால் இவனிடம் எதனை ஆய்தம் irukum? ஆய்தம் யாரிடம் உள்ளது ? தீர் விசாரிக்க வேண்டிய தீவிரவாதி எவன்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
10-ஜூலை-202004:36:05 IST Report Abuse
RaajaRaja Cholan இவன் நாட்டுக்கு தேவையா, இவனை அங்கேயே சுட்டு கொன்று நாடு மக்கள் வரி பணத்தை மிச்ச படுத்தியிருக்கலாம்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-ஜூலை-202020:09:47 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எதற்கும் முன்னெச்சரிக்கையாக காலை ஒடித்து விடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X