சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாடகை கேட்டதால் ஆத்திரம்: வீட்டு உரிமையாளர் ஓட ஓட குத்திக்கொலை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
Chennai, Murder, chennai news, crime, சென்னை, வீட்டு உரிமையாளர், வாடகை, குத்திக்கொலை

சென்னை: சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், குன்றத்தூரில் வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21), என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகையை அஜித் குடும்பத்தினர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்றிரவு (ஜூலை 08) அஜித்தின் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்த சம்பவத்தை அறிந்த அஜித், குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி குணசேகரனை கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அஜித்தை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
12-ஜூலை-202012:24:52 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஆனந்த் நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்
Rate this:
Cancel
Anand K - chennai,இந்தியா
11-ஜூலை-202007:03:03 IST Report Abuse
Anand K ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர் எந்த வித வருமானம் இல்லாத வாடகை தாரர் இடம் பூட்டிய வீட்டிற்கு வாடகைதாரர்கள் இடம் வாடகை வாங்க வேண்டாம் என தமிழக அரசு ஆணை இட்டது தமிழக சென்னை இல் உள்ள அனைத்து மக்களுக்கும் கடந்த ஐந்து மாதமாக இரண்டு ஆயிரம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவசமாக விட்டு உரிமையாளர் மற்றும் வாடகை தாரர்களுக்கு வழங்க பட்டது வாடகை தாரர் மட்டும் இதில் வாழ்க்கை நடத்து போது விட்டு உரிமையாளர் வாழ்க்கை நடத்த முடியாது
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
09-ஜூலை-202019:07:12 IST Report Abuse
JSS அவர் ரௌடி பார்ட்டியை சேர்ந்தவரா என்று கண்டு பிடியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X