பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதத்தில் ராயபுரம் முன்னிலை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020
Share
Advertisement
Chennai,Corona Cases, Ratio, Recovery Rate, COVID-19, TN, Corona, CoronaVirus, Death Ratio, சென்னை, கொரோனா, பாதிப்பு, மண்டல வாரியாக, ராயபுரம், தண்டையார்பேட்டை, இறப்பு விகிதம், குணமடைவோர், விகிதம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிக குணமடைந்தோர் விகிதம் கொண்ட மண்டலமாக ராயபுரம் உள்ளது. அங்கு 79 சதவீதம் மீட்பு விகிதம் உள்ளது.

சென்னையில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் இதுவரை 72,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,146 பேர் உயிரிழந்துள்ளனர். 21,766 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 57.98 சதவீதம் ஆண்களும், 42.02 சதவீதம் பெண்களும் உள்ளனர்.


வயது வாரியாக பாதிப்பு விகிதம்


9 வயதுக்கு உட்பட்டவர்கள் - 3.14 சதவீதம்
10 முதல் 19 வயது - 7.19 சதவீதம்
20 முதல் 29 வயது - 18.21 சதவீதம்
30 முதல் 39 வயது - 18.17 சதவீதம்
40 முதல் 49 வயது - 18.18 சதவீதம்
50 முதல் 59 வயது - 16.72 சதவீதம்
60 முதல் 69 வயது - 10.88 சதவீதம்
70 முதல் 79 வயது - 5.56 சதவீதம்
80 வயதுக்கு மேல் - 1.95 சதவீதம்


latest tamil news




குணமடைவோர் விகிதம்


சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் விகிதத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 79 சதவீதம் அளவிற்கு குணமடைவோர் விகிதம் உள்ளது. அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 77 சதவீதமும், தேனாம்பேட்டையில் 72 சதவீதமும், வளசரவாக்கம், சோழிங்கநல்லூரில் தலா 69 சதவீதமும், திரு.வி.க.நகர், அண்ணாநகர், அடையாறில் தலா 68 சதவீதமும் குணமடைந்துள்ளனர். மிகக்குறைவான விகிதம் (57 சதவீதம்) உடைய மண்டலமாக பெருங்குடி உள்ளது.


இறப்பு விகிதம்


latest tamil news


கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதத்தில் மிகக்குறைவான மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 0.58 சதவீதம் என்ற ரீதியில் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அடுத்த இடங்களில், வளசரவாக்கம் (1.04), ஆலந்தூர் (1.13), மணலி (1.14), அம்பத்தூர் (1.20) உள்ளன. திருவொற்றியூர் மண்டலமானது அதிக இறப்பு விகிதம் (2.28) கொண்ட மண்டலமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X