பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Online Classes, Government Schools, Sengottaiyan, School Education Minister K A Sengottaiyan, ஆன்லைன், வகுப்புகள், டிவி, அமைச்சர், செங்கோட்டையன், விளக்கம்

ஈரோடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில், டிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், வரும் 13ம் தேதி அதனை முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்த நிலையில், டிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


latest tamil news


தமிழகத்தில் உள்ள கிராமங்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதற்கு தேவையான பணிகள் நடைபெறும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. 6,010 பள்ளிகளில் கணிணி வழங்கி கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


டிவி மூலமாகத் தான் தற்போது பாடத்திட்டங்களை கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள். தேர்வு நடத்த அரசும், தேர்வு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளது. அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது தேர்வு எழுத உள்ளனர். மாணவர், பெற்றோர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் அனைவருக்கும் ஆல்பாஸ் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் தான் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
10-ஜூலை-202016:48:37 IST Report Abuse
S.P. Barucha மெத்த படித்தவர்கள் இவர்கள்.
Rate this:
Cancel
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
09-ஜூலை-202018:04:28 IST Report Abuse
M.RAGHU RAMAN கல்வித்துறையை நாசமாக்கி போனவருடம் ஜூன் மாதம் பி. எட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றவர்களுக்கு இன்னும் தேர்ச்சி சான்றிதழ் வரவில்லை என்று கவலையுடன் கண்ணீர் விடுகிறார்கள். கவனிக்கவும்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-ஜூலை-202015:48:21 IST Report Abuse
அசோக்ராஜ் அசல் ஆசிரியர்கள் டப்பிங் மட்டும் செய்தால் போதும். கவர்ச்சி நடிகைகளை வாயசைத்து நடிக்க வையுங்கள். டுமீல் மாணவர்கள் ஒரு வகுப்பும் விடாமல் பார்ப்பார்கள். விளம்பர கல்லாவும் நிறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X