பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம்: பிரதமர்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிரதமர் மோடி, வாரணாசி, கொரோனா, உ.பி., பிரேசில், PM Modi, praises, UP, uttar pradesh, Coronavirus, Corona, Covid-19, Covid-19 pandemic,

புதுடில்லி: அரசின் நடவடிக்கைகள் மூலம் கொரோனாவிலிருந்து மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வாரணாசியை சேர்ந்த தன்னார்வலர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன்னர், கொரோனா போன்ற ஒரு நோய் தொற்று ஏற்பட்டது. அப்போது, இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் இல்லை. ஆனால், அந்த நோய் தொற்று ஏற்பட்ட போது நமது நாட்டிலும் அதிகம் பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனா பரவ துவங்கியதும், இந்தியா குறித்து உலக நாடுகள் கவலைப்பட்டன.
இந்த முறையும், இந்தியாவில் நிலைமை மோசமாகும் என நிபுணர்கள் கவலைப்பட்டனர். ஆனால், என்ன நடக்கிறது? 23 - 24 கோடி மக்கள் தொகை கொண்ட உ.பி., போன்ற மாநிலங்களில் மக்கள் உதவியுடன் இந்த பிரச்னையில் இருந்து மீண்டுள்ளோம்.


latest tamil newsஉ.பி., அளவு கொண்ட பிரேசிலில் கொரோனாவால் 65 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால், உ.பி.,யில் 800 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. உ.பி., வைரஸ் வேகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், கொரோனா உள்ளவர்களும் வேகமாக குணமடைந்து வருகின்றனர். இதற்கு நீங்கள் அனைவரும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-202017:51:42 IST Report Abuse
Janarthanan அடேய் வெட்டி மாறா கொண்டையை மறை உண்மை சொன்னா கோபம் வர்கிறதா ???? நீங்க பண்ண அக்கபோர்க்கு கேள்வி கேட்க /அரசை குறை சொல்ல தகுதி இல்லை வெட்க பட வேண்டும் உங்களின் செயல்களுக்கு ????
Rate this:
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-202017:49:11 IST Report Abuse
babu To all intelligent people who commented here , USA is far advanced in technology wise. Its three times bigger in land size , Its four times smaller in population size. Now compare how many infections and death rate between USA and INDIA. USA never was in full lockdown , Domestic flights was not cancelled. India has cancelled its domestic and all its railway services. If these decisions have not been taken INDIA's Infected and Death rate would have been 10 times of USA Infected and Death Rate. Think if you can ............................
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-202018:54:01 IST Report Abuse
babu@Raj, Losing jobs and Losing lives are two different things. Here the topic is about lives , Which opposition parties came and helped the people during crisis , appearing infront of camera and speaking BS is not helping people. State Govt should have stepped in to confront the migration workers and provided necessary help to keep them safe and sound. Not central govt of course the state govt can ask help regarding this. Instead what did the states did they wanted to get rid of these migrant workers and facilitated buses to go to their respective states. Now you blame central govt alone pathetic....
Rate this:
Cancel
ஆல்வின், பெங்களூர் போற்றத்தக்க செயல். பாஜக கூட்டணி இல்லாமல் காங்கிரஸ், திமுக கூட்டணி இருந்து இருந்தால்! நினைத்தாலே பயமாக இருக்கிறது. இவ்வளவு மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவே. பிரதமரின் வழிகாட்டுதலை முழுமையாக மாநிலங்கள் பின்பற்றி இருந்தால் பாதிப்பு இன்னும் குறைவாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X