கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவர்கள் மீது சந்தேகம் ஏன்? ஐகோர்ட் கேள்வி

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சித்த மருத்துவம், சென்னை ஐகோர்ட், கேள்வி, கொரோனா, மருந்து,

சென்னை: சித்த மருத்துவர்கள், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினார், சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

திருத்தணிகாசலம் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து, அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
சித்த மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினால் சந்தேக பார்வையை விரிப்பது ஏன்? மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சந்தேகம் எழுப்புவது ஏன் சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாமே? மத்திய மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்க்கிறது.


latest tamil news



நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவிசெய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக எத்தனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சித்த மருத்துவர்கள் கண்டுபிடிதத எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா? ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது.? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-ஜூலை-202021:40:54 IST Report Abuse
அசோக்ராஜ் குலத்தொழிலை ஒழித்துக் கட்டியதால் இந்தியா இழந்த செல்வங்களில் சித்த வைத்திய அறிவுப் பெட்டகம் முக்கியமானது.
Rate this:
Cancel
parthiban s - kolkata,இந்தியா
09-ஜூலை-202020:56:33 IST Report Abuse
parthiban s மஞ்சள் காமாலை நோய்க்கு அலோபதியில் இனறு வரை சரியான மருந்து இல்லை. பல மாதங்கள் சிகிச்சைக்கு பின்னும் மரணம் நிச்சயம். வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு காமாலை நோய்க்கு இருந்தால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். காமாலை மீது அவ்வளவு பயம். காமாலை பாதித்தவர்களுக்கு பசிக்காது. எதாவது உண்டால் உடனே வாந்தி வரும். உணவு செரிக்காது ஆனால் சித்த மருத்துவம் ஒரே ஒரு முறை மருந்தில் குணப்படுத்துகிறது. மருந்து சாப்பிட்டு 3 மணிநேரத்தில் நல்ல பலன் கிடைக்கும். நன்றாக பசிக்கும் சாப்பிட்ட உணவும் செரிமானமாகும். சில நாட்கள் உணவு கட்டுப்பாடு மட்டுமே போதும் நோயாளிகள் பூரண குணமடைவார்கள். சித்தமருத்துவம் உண்ணதமானது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-ஜூலை-202020:30:11 IST Report Abuse
Darmavan திருத்தணிகாச்சலத்தை வெளியே விடாமல் இதென்ன வார்த்தை ஜாலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X