ரவுடி விகாஸ் துபே கைது உ.பி., அரசின் தோல்வி: பிரியங்கா

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
Priyanka, UP, Vikas Dubey, Madhya Pradesh, Police, mp, cbi probe, priyanka gandhi, mp, பிரியங்கா, ரவுடி, விகாஸ் துபே, கைது, உபி, அரசு, தோல்வி

இந்த செய்தியை கேட்க

லக்னோ: உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டான். இது உ.பி., அரசின் தோல்வி என காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.25 ஆயிரம் என அறிவித்த பரிசுத்தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கான்பூர் போலீஸ் மற்றும் உபி அதிரடிப் படையின் அறுபதிற்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து விகாஸை ஒரு வாரமாக தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து இன்று (ஜூலை 9) காலை கைது செய்தனர்.


latest tamil news



இது குறித்து காங்., பொதுச்செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கான்பூர் சம்பவக் குற்றவாளியை பிடிப்பதில் உ.பி அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. முழுமையான எச்சரிக்கை சூழல் நிலவியபோதும் குற்றவாளி விகாஸ் உஜ்ஜைன் வரை சென்றது பாதுகாப்பு குறைபாட்டுடன் அவருடன் இருந்த ரகசியத் தொடர்பும் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உ.பி அரசு சிபிஐ விசாரணை நடத்தி பாதுகாப்பின் அனைத்து உண்மைகளையும், தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
13-ஜூலை-202018:34:47 IST Report Abuse
Ray வேலிதாண்டிய வெள்ளாடு போலீசையும் போட்டுத் தள்ளியிருக்கணும் அப்பத்தான் சிங்கம்
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
13-ஜூலை-202009:19:55 IST Report Abuse
Enrum anbudan கிராப் வச்சுக்கிட்டு இந்திரா (காந்தி) மாதிரி குரல் கொடுத்தா போதாது. மக்களிடமும் கொஞ்சம் போகணும் அவர்களுக்காக வேலை செய்யணும் .
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
10-ஜூலை-202018:41:43 IST Report Abuse
srinivasan பத்து போலீஸ்-ஐ கொன்ற கிரிமினல் கைது செய்யப்பட்டால், அது அரசுக்கு தோல்வி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X