பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: 4 நாட்களில் குணமடைந்தார் கோவை எம்.எல்.ஏ., அர்ச்சுனன்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோவை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன், தொற்று கண்டறியப்பட்டு நான்கு நாட்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.



latest tamil news




கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுனன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள, திருநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில், இவரது மகள் குடும்பத்தினர், மதுரைக்கு சென்று திரும்பினர். இதையடுத்து, வீட்டில் உள்ள, 9 பேருக்கு கடந்த, 29ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எம்.எல்.எ., அம்மன் அர்ச்சுனனின், 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, மூவரும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், கடந்த 5ம் தேதி அம்மன் அர்ச்சுனனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



இந்த நிலையில், அவரது பேத்தி குணமடைந்த நேற்று வீடு திரும்பினார். இன்று, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், அவரது மகள், மருமகன் ஆகியோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால்தான் நான் விரைவில் குணமடைய முடிந்தது. மருத்துவ குழுவினருக்கு பாராட்டுக்கள்' என, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
09-ஜூலை-202018:03:16 IST Report Abuse
siriyaar இப்படி இஷிய முடியும்னா எதற்கு மூட வேண்டும் எல்லாத்தையும் திறந்திடுங்க பள்ளிகளை கல்லூரிகளை மட்டும் ஆன்லைன் வகுப்புகள் வைத்துவிட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X