பொது செய்தி

இந்தியா

ரூ.14,500 கோடி வங்கி மோசடி வழக்கு: அகமது படேலிடம் 4வது முறையாக விசாரணை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ED, Questions, AhmedPatel, PMLA case, Sandesara Money Laundering Case, அமலாக்கத்துறை, அகமதுபடேல், விசாரணை

புதுடில்லி: ரூ.14,500 கோடி வங்கி கடன் மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலிடம் நான்காவது முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து நிறுவன நிர்வாகிகள் சந்தேசரா சகோதரர்கள். அவர்கள் வங்கியில், 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை மோசடியாக பிற தொழில்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே அகமது படேலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. எனவே இவ்வழக்கில் அகமது படேலிடமும் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.


latest tamil news


70 வயதாகும் அகமது படேலிடம் ஜூன் மாதத்தில் ஏற்கனவே மூன்று முறை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கொரோனா பரவலை காரணம் காட்டி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டார். அதனை ஏற்று அவர் வீட்டிலேயே வந்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதுவரை இம்மோசடி தொடர்பாக 128 கேள்விகள் கேட்டுள்ளனர். இந்த நிலையில் நான்காவது முறையாக இன்றைக்கும் படேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


என்னையும், என் குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்துடனும், அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அகமது படேல் கூறி வருகிறார். அகமது படேலின் இல்லத்தில் வைத்து அவரது மருமகன் இர்பான் சித்திகிக்கு பணம் கொடுத்ததாக சந்தேசரா சகோதரர்களின் ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜூலை-202016:41:20 IST Report Abuse
mathimandhiri இப்போது பாசிட்டிவாக ஒன்று செய்யலாம். அரசுக்கோ இந்த இக்கட்டான நேரத்தில் எதிரிகள் படையெடுப்பு, கொரோன பாதிப்பு, தொழில்துறை முடக்கம் உற்பத்தி சரிவு வேலையின்மையின் விசுவ ரூபம் போன்றவற்றை எதிர்கொள்ள ஏராளமான நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. எனவே இந்தக் கயவர்களுக் கெல்லாம் ஒரு நிபந்தனை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி ஒரு அவசரத் சட்டம் கொண்டு வர வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை தாமாகவே முன் வந்து ஒப்படைத்தால் வழக்கு விசாரணை கிடையாது என்றும், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்க வேண்டும். சுவிஸ் பேங் பணம் நிச்சயமாக இவர்கள் கைக்கு அப்படியே திரும்பி வரப்போவதில்லை. இவற்றை எல்லாம் உணர்ந்து ,சிலராவது இதற்கு உடன்பட்டு அதன் மூலம் அரசுக்கு நிதி கிடைக்க வாய்ப்புண்டு.இதை பற்றி அரசு தீவிரமாக யோசித்தால் நல்லது. எத்தனையோ கால விரயமும் சட்டச் செலவும் மிச்சமாகும்.
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
09-ஜூலை-202022:09:00 IST Report Abuse
jambukalyan எல்லா அரசியல் திருடர்களும் சொல்லும் ஒரே பதில் “ஆளும்கட்சி பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது”.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
09-ஜூலை-202021:46:58 IST Report Abuse
sundarsvpr நேரு நாட்டின் சுதந்திரம் பெற தியாகத்திற்கு புண்ணியம்) அவருக்கு உயரிய பதவி கிடைத்தது. அவர் குடும்ப வாரிசுகளுக்கு பதவி கிடைத்தது. சரிக்கு சரியாவிட்டது. நேரு அவர் வாரிசுகள் ஆட்சி ஊழல்களின் பாவம் தீர்க்கப்படவில்லை. அதுதான் அமுலாக்க துறை மூலம் வெளிவந்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X