பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த பாக்., நபர்: அதிர்ச்சி வீடியோ

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
shocking video, viral, pakistan, islamabad, Kill, Hindus, Islamabad temple, Temple, Construction, ஹிந்து, கோயில், இஸ்லாமாபாத், கொலை, பிஞ்சு

இஸ்லாமாபாத்: ‛பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஹிந்து கோவில் கட்டப்பட்டால், அனைத்து ஹிந்துக்களையும் ஒவ்வொருவராக கொல்வேன்' என 4 வயது சிறுவன் பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்கவும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும், பாக்., நீதிமன்றம் நேற்று முன்தினம், தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தாடி வைத்துள்ள நபர், தனது மகன் பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு ஒன்றை சொல்ல விரும்புவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‛கான்சாகிப். ஒருவேளை இஸ்லாமாபாத்தில் ஹிந்து கோவில் கட்டி முடிக்கப்பட்டால், ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். நான் ஒவ்வொரு ஹிந்துவையும் கொலை செய்வேன். புரிகிறதா? அல்லா உங்களை காப்பாற்றுவாராக' என சிறுவன் பேச, அருகில் நிற்கும் மற்றொரு பிஞ்சு குழந்தையும் அதை ஆமோதிக்கிறது.


latest tamil news


பிஞ்சு சிறுவனின் மனதில் தந்தையே நஞ்சை விதைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுவதற்கு இதுவே காரணமென இந்தியர்கள், சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
12-ஜூலை-202018:08:19 IST Report Abuse
R Ravikumar என் கவலை என்னவென்றால் பாகிஸ்தானில் உள்ள ஹிந்து மக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் ? எப்படி பிழைப்பார்கள் ? CAA சட்ட திருத்தம் சரிதான் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் . நம் இந்தியாவில் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் நாம் எப்படி நட்பாக இருக்கிறோம் ? நம் ஹிந்து மக்களுக்கு இந்தியாவில் இப்படி ஒரு வீடியோ கூட வேண்டாம் , சொல்வதற்ற்கு கூட வாய் வராது . இறை அருள் காக்கட்டும் .
Rate this:
Cancel
hasan - tamilnadu,இந்தியா
12-ஜூலை-202012:04:14 IST Report Abuse
hasan இவை எல்லாமே தவறுதான், முஸ்லிம்களை கொல்வேன் என்று தீவிரவாதிகள் குழந்தைகள் கூறும் எத்தனை விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன,இவற்றை எல்லாம் பெரிதாக்கி ஏதாவது கலவரம் செய்ய துடிக்க வேண்டாம்
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
11-ஜூலை-202021:27:25 IST Report Abuse
Rajan வினை விதைத்தவன் வினை அறுப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இது கலியுகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X