பொது செய்தி

இந்தியா

ஆம்புலன்சில் ஏழு கி.மீ பயணத்திற்கு ரூ.8 ஆயிரம் கட்டணம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளியிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் வழக்கு பதிவு செய்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அரசு மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தல் முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



latest tamil news



இந்நிலையில் புனே மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த நோயாளி ஒருவரை அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். வெறும் ஏழு கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ரூ.8 ஆயிரம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் நேவல் கிஷோர் ராம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது உண்மை என தெரிய வந்தது.


latest tamil news



இது குறித்து புனே மாவட்ட கலெக்டர் கிஷோர் ராம் கூறுகையில் சம்பந்தப்பட்ட நோயாளி பிப்வேவாடியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தார். தற்போதைய விசாரணைக்கு பின் அவர் எரண்ட்வானே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளார். ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க முடியும் . மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜூலை-202009:39:48 IST Report Abuse
Sampath Kumar நல்ல பிசினஸ் தனியார் மாயம் வாழ்க
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
10-ஜூலை-202019:19:49 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி கோறானோ தொற்றுள்ளவரை அழைத்துச் செல்ல வரும் ட்ரைவர் செவிலியர்களுக்கு அதற்கான பாதுகாப்பு உடைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம். மேலும் தொற்றுள்ளவரை கொண்டு மருத்துவமனையில் விட்டதும் அந்த ஆம்புலன்ஸை சுத்தம் செய்யவும் செலவு ஆகிறது. இதுவே சாதாரண நோயாளி என்றால் மிக்க குறைந்த செலவே பிடிக்கும். எனவே அநியாயம் என்பதெல்லாம் பயனில்லை. அதே போல பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் செலவு என்று குதிக்கின்றனர். சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கான மருந்து, உணவு இவற்றுக்கு மிக சொற்பமாகவே செலவானதாக சிகிச்சை முடிந்து குணமாகி வந்தவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவர்களை வைத்து பராமரிக்கவும் மருத்துவருடைய சம்பளமும் மிக அதிகம் என்கிறார்கள். அதற்குத்தான் அரசு மருத்துவ மலைகளையும் பொதுமக்கள் ஆதரிப்பதுடன் அவற்றை ஒழுங்காக செயல்படவும் பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம்.
Rate this:
Cancel
10-ஜூலை-202005:14:48 IST Report Abuse
ஆப்பு அமெரிக்காவுலதான் இப்பிடி கட்டணம் வசூலிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நாம அமெரிக்கா ரேஞ்சுக்கு வளர்ந்துட்டோம் போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X