பொது செய்தி

இந்தியா

கேரளா தங்க கடத்தல் விவகாரம்: என்.ஐ.ஏ. விசாரிக்க அனுமதி

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த
NIA, probe, Kerala, gold smuggling case, Union home ministry, mha, kerala

புதுடில்லி: கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில், சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார்.
\


latest tamil news
இதில் தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராக பணியாற்றியவருமான சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ள நிலையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உண்மையை வெளிவர என்.ஐ..ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூலை-202011:53:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஸ்வப்னா வை அதிகாரி என்று சொல்லுறாங்களே மெய்யாலுமா அவள் பத்தாங்கிளாஸ் படிச்சவ என்றும் போட்டிருந்தான் ஒருவன் எப்படி இதையெல்லாம் நம்பறது மேக்கப்புடன் இருக்குது இந்தலெடி பெரிய படிப்பெல்லாம் படிக்காமல் எப்படீங்க அதிகாரி ஆவமுடியும் எப்படியோ கேரளத்து சசிகளைப்போல இருக்கா சசி ஜெயம்மாவை அழிச்சு இவை என்ன எதை அளிக்கபோறாளோ
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூலை-202008:27:26 IST Report Abuse
Sampath Kumar எம்புட்டோ தங்கம் கடத்திகிட்டு இருக்கானுக அதுக்கு ellam என் எஸ் இ விசாரணை இல்லை இதுக்கு மட்டும் பிஜேபியின் சதி திட்டம் புரிகிறது
Rate this:
Cancel
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
10-ஜூலை-202007:13:33 IST Report Abuse
Vasudevan Jayaraman ஸ்வப்னாவை பிடித்தாலும் , பேரம் பேசி விடுவார்கள். அதற்குள் இன்னொரு கேஸ் வந்துடும் , மக்களூம் மறந்து விடுவோம் . உண்மையாக அரசியல் வியாதிகளுக்கு நம் போன்று டீசென்ட் ஆட்கள் தேவை இல்லை. அவர்களுக்கு நிறைய ஸ்வப்னாகள் தேவை. சேகர் ரெட்டியை பிடிப்பது போல் பிடித்து பின்னர் திருப்பதி கோவிலில் பெரிய பதவி கொடுத்து ரொம்ப நாட்கள் ஆகவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X