ஈரான் தளபதி சுலைமானியை கொன்றது சட்டவிரோதம்: அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

ஜெனீவா: 'ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்' என, ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவால் விமான தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலைமானி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 35 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள ஈரான், கடந்த வாரம் அவர்களுக்கு கைது வாரண்டும் பிறப்பித்துள்ளது.latest tamil news
இந்நிலையில், சர்வதே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்த ஐ.நா.,வின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட், தனது அறிக்கையை இன்று (9ம் தேதி) ஐ.நா.,வின் மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பித்தார்.

அதில், தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டார் என்பதற்கான எந்த ஆதாரத்தை அமெரிக்கா அளிக்கவில்லை. ஈரான் ராணுவத்தின் ராஜதந்திரங்களுக்கு தலைமை தாங்கியவரான சுலைமானி, சிரியா மற்றும் ஈராக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்தார். அவரால் மற்றவர்கள் உயிர்களுக்கு ஆபத்து என்ற நிலை இல்லாத நிலையில், இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது சட்டத்துக்குப் புறம்பானது.

எனவே இந்த டுரோன் தாக்குதலானது 'தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை' என்பதால், சர்வதேச மனித உரிமை சட்டப்படி இதற்கு அமெரிக்காதான் பொறுப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களும் சட்டத்துக்கு எதிரானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து அமெரிக்காவின் உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஒர்டகஸ், 'ஈரான் ஜெனரல் சுலைமானி உலகின் மோசமான பயங்கரவாதி என்ற அவரது கடந்த காலத்தை மறந்துவிட்டு, இவ்வாறு அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை எழுதியது நேர்மையின்மையை காட்டுகிறது. இது பயங்கராவதிகளுக்கு ஆதரவளிக்கும் அறிக்கை' எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூலை-202008:51:03 IST Report Abuse
Sampath Kumar கண்டித்து என்ன பண்ண போறீங்க
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
10-ஜூலை-202009:14:12 IST Report Abuse
R Ravikumar இது உலக அரசியல் . அமெரிக்காவிற்கு சீனாவின் பதில் மறை முகமாக . அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதல் பற்றி சரியாக தெரியாது ஆனால் ஐ நா சபை கூட சீனா கட்டுப்படுத்த முடியுமோ என்ற சந்தேகம் வருகிறது . சீனா ஒரு நோய் இந்த உலகத்திற்கு .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஜூலை-202006:16:17 IST Report Abuse
meenakshisundaram அப்போ தீவிர வாதிகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் இடம் போடணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X