கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களையே தமிழகம் நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது: உயர்நீதிமன்றம்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்கக் கூடிய சூழ்நிலையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.latest tamil news
வெளிமாநில தொழிலாளர்களுக்கு இடம் உணவு உள்ளிட்டவை வழங்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழகம் விவசாயத்திற்கு கூட வெளிமாநில தொழிலாளர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும். அவர்களை நம்பி செயல்படும் பல நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


latest tamil newsஅப்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது போல, வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய தொழிலாளர் களுக்கும் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிட மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. மனுவை விசாரித்த நீதபதிகள், ' தமிழக அரசு இது குறித்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்க வேண்டும்,' இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
10-ஜூலை-202011:51:49 IST Report Abuse
konanki கட்டிட மேஸ்திரி சித்தாள் பெரியாள் கம்பி கட்றது டைல்ஸ் ஓட்டுதல் பிளம்பிங் எலெக்ட்ரிக்கல் பெயிண்ட்ங்க் இப்படி கட்டுமான துறையில் எந்த வேலையும் தமிழர் செய்வதில்லை. உழைப்பு கம்மி. கூலி அதிகம் கேட்பு. 2 நாள் வேலைக்கு வந்தா 3 ம் நாள் வரமாட்டார்கள்.இதனால் காண்டிராக்ட் ரன்கள் ஒரிஸ்ஸா மேற்கு வங்காளம் பீகார் உ பி மாநிலத்தில் இருந்து ஆட்கள் கூட்டி வருகிறார்கள். இவங்க ஒழுங்காக உழைத்து ஊருக்கு / குடும்பத்திற்கு பணம் அனுப்புறாங்க. இதில் என்ன தப்பு எஜமான்? இவர்கள் இந்தியர்கள் தானே? ஓ ஓரு வேளை பங்களாதேஷ் லிருந்து வந்தா தான் ஓகேவா?
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10-ஜூலை-202011:13:46 IST Report Abuse
Subramanian Arunachalam நீதிபதி அய்யா அவர்களே உடனடியாக திரு மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் சம்மன் அனுப்பி ஏன் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கேட்டு பிறகு அவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கவும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஜூலை-202010:19:04 IST Report Abuse
Lion Drsekar இதற்கு ஒரே காரணம் அரசியல் கட்சிகள், ஜாதி மற்றும் மொழி இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் குறுக்கீடுகள், பணம் போட்டவர்கள் எந்த ஒரு வேலையும் தெருவுக்கு தெரு வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களின் தயவு இல்லாமல் எந்த ஒரு பணியும் செய்ய முடியாது, போட்ட பணத்தை எடுக்க முடியாமல் விழி பிதுங்கி தினம் தினம் இறந்து போக வேண்டிய ஒரு நிலை, வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்வது மட்டுமே முழுநேர தொழிலாக கொண்டு இருக்கிறார்கள், நம் மக்களை கெடுத்தது நம்மவர்கள், மேலும் எல்லாமே இலவசம் என்று அறிவித்ததால் எதற்கு வேலைக்கு செல்லவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது, யாரையும் தவறாக கூறவில்லை, நடைமுறை அப்படி ஆகிவிட்டது என்ற வருத்தம். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X