பொது செய்தி

இந்தியா

விளைச்சல் இல்லாததால் தக்காளி விலை அதிகம்: அமைச்சர்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பெரிய நகரங்களில் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ. 60- 70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் இல்லாததே விலை அதிகரிப்புக்கு காரணம் என மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நாட்டில் தக்காளி விலை பெங்களூருவில் ரூ.46 க்கும் ,சென்னையில் கிலா 40 ரூபாய்க்கும், ஐதராபாத்தில் ரூ.37 க்கும் விற்னை செய்யப்படுகிறது. ஒன்றிற்கு ரூ.60-70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நகரங்களான குர்கான், காங்டாங், சிலிகுரி, ராய்ப்பூர், மற்றும் கோரக்பூர், கோட்டா, மற்றும் திம்பூர் உள்ளிட்ட நகரங்களில் கிலோ ஒன்றிற்கு 70-80 வரையி விற்பனை செய்யப்படுகிறது.


latest tamil news



தக்காளி விலை உயர்வு குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது: உற்பத்திகுறைந்த காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரையில் விலைகளில் ஏற்றம் இருக்கும் எனவும், உற்பத்தி அதிகரித்த உடன் விலைகள் இயல்பு நிலைக்கு வரும் என கூறினார்.

நாட்டில் உ.பி., ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் , தமிழ்நாடு, ஜம்முகாஷ்மீர் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தக்காளி பற்றாக்குறை மாநிலங்களாக உள்ளன. நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 19.73 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் 11.51 மில்லியன் டன் நுகர்வுக்காக உபயோகத்திற்காக பயன்படுகிறது. என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
10-ஜூலை-202009:45:22 IST Report Abuse
Girija தமிழ் நாட்டில் அதிகம் தேவை குளிரூட்டப்பட்ட தானிய கிடங்கு மற்றும் பழசாறு பிழியும் தொழிர்சாலைகள், ஒட்டன் சத்திரம் பகுதி மற்றும் மேட்டுபாளையம் பகுதியில் . . வருடா வருடம் அதிக விளைச்சலினால் காய்கறி பழங்கள் மற்றும் பூக்கள் சரியான விளைகிடைக்காமல் குப்பையில் கொட்டப்படுகிறது , இது நன்கு முன்னேறிய தமிழ்நாட்டில் அதிகம் . சேமிப்பு கிடங்கு மற்றும் வேல் யு அட் தொழிசாலைகளை உருவாக்கி அதற்கு அந்த தலைவர்கள் பெயரை வைக்கலாமே ?.
Rate this:
Cancel
10-ஜூலை-202007:37:38 IST Report Abuse
தமிழ் இதை சொல்வதற்கு ஒரு அமைச்சர்.உற்பத்தி அதிகரித்தவுடன் விலை குறையுமாம். விளங்கிடும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
10-ஜூலை-202006:25:58 IST Report Abuse
Indhuindian அப்பா எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. இதே தான் எல்லாத்துக்கும் விளைச்சல் இல்லேன்னா வெங்காயம் விலை ஜாஸ்தி ஆகுது அதே மாதிரி தானே. நம்ம சேலம் பக்கம் ஒரு சில சீசனில்லே ஒரு கூடை தக்காளி ஒரு ரூபாய்க்கு (தக்காளிக்கு விலை கிடையாது அது இலவசம் அந்த கூடைக்குதான் ஒரு ரூவா) கூவி கூவி மனம் ஒடிஞ்சி விக்கறாங்களே அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? அதை எப்படி உபயோகப்படுத்தலாம் எப்பவாது சிந்தித்தது உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X